Pages

Tuesday 3 August 2010

கலந்து வாழும்போது கரைந்து போகாமல் இருப்பதே எமது முதன்மைப் பிரச்சினை; by Br. எம்.ஏ.எம். மன்ஸூர் (Plus*)

 * இலங்கை முஸ்லிம்களை அல்குர்ஆனுடன் தொடர்புபடுத் துவதற்கு நீங்கள் சொல்லும் ஆலோசனைகள்?

மத்ரஸாக் கல்வி மற்றும் பாட சாலைக் கல்வி என்ற இரண்டு தவிர்க்க முடியாத கல்வி முறைகள் எங்களிடத்தில் இருக்கின்றது. பெரும்பாலும் எங்களது சமூகத் தில் அல்குர்ஆனை ஓதப்படிப்பது வாஜிப் போல் ஆகிவிட்டது. யாரும் அதைத் தவறவிடுவதில்லை. ஆனால், யாரும் அல்குர்ஆனை படிக்க வைப்பதில்லை. அதனை ஒரு பிரதானமான விடயமாக எடுப்பதில்லை.

மத்ரஸாவுக்குச் செல்பவர்களுக்கு மட்டுமல்லாது அல்குர் ஆனை அனைவருக்கும் கற்பிக்க வேண்டும். அதற்கான முதலாவது வழி, திறந்த அமைப்பில் அல்குர் ஆனைக் கற்பதற்கான கல்லூரிகள் பரவலாக உருவாக்கப்பட வேண்டும். சமூகத்திலுள்ள பல மட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கும் அங்கு அல்குர்ஆன் கற்பிக்கப்பட வேண்டும் என நான் நினைக்கின்றேன்.

இரண்டாவது வழிமுறை, நாங்கள் அல்குர்ஆனை ஓதிக் கொடுப்பதோடு நிறுத்தா மல் குறிப்பிட்ட காலத்திற்கு அல்குர்ஆனை படித்துக் கொடுக்கலாம். அப்படியா யின் மிகச் சிறிய வயதிலேயே அல்குர்ஆனின் முக்கிய விடயங்களைக் கற்றுக் கொடுக்க முடியுமாக இருக்கும்.

அடுத்தது, முன்பள்ளிகளில் அல்குர்ஆனைக் கற்றுக் கொடுக்க என்ன செய்யலா மென்று நாங்கள் யோசிக்க வேண்டும். அறபு மொழியை சமூக மயப்படுத்த மிக நீண்ட காலம் எடுக்கும். எனவே, அறபு மொழியைப் படித்துவிட்டுத்தான் அல்குர் ஆனைப் படிக்க வேண்டும் என்று சொல்ல முடியாது.

ஆதலினால், தமிழ் மொழியில் இலகுவான முறையில் அல்குர்ஆனைக் கற்க, கற்பிக்க வழி செய்ய வேண்டும். இதை மூன்றாவது வழி முறையாகச் சொல்ல லாம். நான்கா வது வழிமுறையாக, அறபு மொழி யைப் பரவலாக்குவதனைக் குறிப் பிட முடியும்.

* சிறுபான்மையினருக்கான பிக்ஹை (பிக்ஹுல் அகல்லிய்யாத்) இலங்கையில் நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் என்ன?

பிக்ஹுல் அகல்லிய்யாத் (சிறு பான்மையினருக்கான பிக்ஹ்) குறித்த தெளிவான, பரவலான அறிமுகம் இலங்கையில் இல்லை. இதுவே முதலாவது சிக்கலாகும். ஏன் அப்படிச் சொல்கிறேன் என்றால் சிறுபான்மையினருக்கான பிக்ஹ் என்பது குறிப்பிட்ட மத்ஹப் சார்ந்து அமையாது. சில சந்தர்ப்பங்களில் நான்கு மத்ஹப் களையும் விட்டு அது வெளியில் செல்லும். மத்ரஸாக்கள் மற்றும் பிரபல இஸ்லாமிய கல்வி நிறுவனங்களில்கூட இது ஒரு பாடமாகக் கற்பிக்கப்படுவ தில்லை. நடை முறைக்கு வருமுன்னர் இந்த விடயம் தொடர்பான தெளிவு வழங்கப்பட வேண்டும்.

பிக்ஹுல் அகல்லிய்யாத் என்ற சிந்தனையை மேற்குலகில்தான் முதலில் ஆரம்பித்தார்கள். ஆனால், மேற்கைவிட ஆசியா, தென்கிழக்கு ஆசியா போன்ற பகுதிகளில்தான் சிறுபான்மையினர் அதிகம் வாழ் கின்றனர். ஆனால், இந்தப் பகுதி களில் அது தொடர்பாக யாரும் பேச வில்லை. ஆய்வுகள் மேற்கொள்ளப்படவு மில்லை. எனவே, பிக் ஹுல் அகல்லிய்யாத் என்றால் என்ன? அது ஏன்? அதை எப்படி நடைமுறைப்படுத்துவது என்ற சிந்தனைத் தெளிவின்மை நிலவுகின்றது. சிந்தனை ரீதியான தெளிவின்மை முதலாவது தடையாகும்.

இரண்டாவது தடை என்ன வென்றால், எங்களுக்கு எதற்கு பிக்ஹுல் அகல்லிய் யாத் தேவைப்படுகின்றது என்பதாகும். மேற்கு நாடுகளில் சிறுபான்மையினர் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகளுக்கும் நாங்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக் கும் இடையில் வேறுபாடுகள் இருக்கின்றன. அப்படி நாங்கள் என்ன பிரச்சினை களை எதிர்நோக்குகின்றோம், மற்றும் நாம் வழமையாகப் பின்பற்றுகின்ற பிக்ஹு டன் நின்று கொள்வதா அல்லது பிக்ஹுல் அகல்லிய்யாத் ஒழுங்குக்குள் வருவதா என்பது தொடர்பாக ஆய்வுகள் செய்கின்ற போக்கும் இங்கு மொத்தமாக இல்லை.

பிக்ஹுல் அகல்லிய்யாத் என்ப தனை கொள்கையளவில் முன் வைப்பதன் மூலம் மாத்திரம் மக்களை அதன்பக்கம் அழைக்க முடியாது. மாறாக, பிரச்சினைகளையும் சொல்ல வேண்டும். பிரச்சினையினூடாகத்தான் பிக்ஹுல் அகல்லிய்யாத்தின் தேவையை விளங்கப் படுத்த வேண்டும்.

உதாரணத்திற்கு, ஒருவரின் மனைவி அல்லது கணவர் இஸ் லாத்தைத் தழுவினார் என்று வைத் துக் கொள்வோம். இப்பொழுது அவருக்குக் குடும்பத்துடன் இருக்க முடியுமா முடியாதா என்றால் வழமையான பிக்ஹ் முடியாது என்று சொல்லும். இதன்படி இஸ்லாத்தைத் தழுவுவதென்பது கஷ்டமான ஒரு விடயமாகும்.

நாம் பிற இன மக்களோடு கலந்து வாழ்பவர்கள். இந்த இடத்தில் நாம் ஏனைய இனத்தவர்களுக்கு ஸலாம் சொல்லலாமா? அல்லது அவர்கள் ஸலாம் சொன்னால் பதில் சொல்லலாமா என் றால், வழமையான பிக்ஹ் கூடா தென்று சொல்லும்.

உழ்ஹிய்யா இறைச்சியை முஸ்லிம் அல்லாதவர்களுக்குக் கொடுக்கலாமா, கூடாதா என்றால் வழமையான பிக்ஹ் கூடாது என்று சொல்லும். இதுபோன்ற பல பிரச்சினைகள் இருக்கின்றன. இது போன்ற பிரச்சினைகளை வைத்துக் கொண்டு சிறுபான்மையாக வாழும்போது நிறைய சங்கடங்களை எதிர்நோக்க வேண்டிவரும்.

இந்த உண்மைகளை வெளிப்படுத்தி பிரச்சினையின் அடிப்படை யில் சமூகத்திற்கு பிக்ஹுல் அகல்லிய்யாத்தை அறிமுகம் செய்ய வேண்டும். எனவே, முதல் சொன்ன இரண்டு தடைகளினாலும் பிக்ஹுல் அகல்லிய்யாத்தை நடை முறைப் படுத்துவதில் சிக்கல்கள் நிலவுகின்றன.

* உங்களது பார்வையில் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் முதன்மைப் பிரச்சினை கள் யாவை?

நாங்கள் இந்த நாட்டில் சிறுபான்மையாக வாழ்கின்றோம். எமது சுய ஆளுமையை இழக்காமல் வாழ்வதே இங்கு முதன்மையானது. அப்படி ஆளுமையை இழக்காமல் வாழ்வது மூடுண்ட சமூகமாக இருக்காமல் அடுத்த சமூகங்களுடன் கலந்து வாழும் சமூகமாக இருக்க வேண்டும். அப்படிக் கலந்து வாழும்போது நாம் கரைந்துபோகாமல் இருப் பதே எம்மைப் பொறுத்தவரை யில் எமது முதன்மைப் பிரச்சினை யாகும்.

எமது ஆளுமை கரைந்து போகாமல் இருக்க எங்களிடம் பூரண மில்லாவிட்டாலும் சில நிறுவன ஒழுங்குகள் இருக்கின்றன. அவை குடும்பம், குர்ஆன் மத்ரஸா, பள்ளி வாயல், பாடசாலை என்பனவா கும். அதேபோல் முன்பள்ளிகள், பைதுஸ் ஸகாத் போன்ற நிறுவன ஒழுங்குகள் என்பவற்றையும் சொல்லலாம். இவற்றை நாம் குறைகளை நீக்கி வளர்த் தெடுக்க வேண்டும்.

அதேபோல, எமக்குத் தேவையான ஏனைய நிறுவன ஒழுங்குகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இத்தகைய நிறுவனங்களை மிகச்சரியான முறையில் பயன் படுத்தும்போது எமது ஆளுமையை நாம் பாதுகாத்துக் கொள்ளலாம்.

* இஸ்லாமியப் பொருளாதாரம் என்பது மாற்றுப் பொருளாதார ஒழுங்காக வளர்ந்து வருகின்றது. இஸ்லாமியப் பொருளாதாரத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகச் சொல்லுங்கள்...

பொருளாதாரப் பிரச்சினை என்பது பொதுவாக எல்லாச் சமூகங்களும் எதிர்நோக்கு கின்ற ஒன்று. இஸ்லாமியப் பொருளாதாரம் எப்படித் தீர்வாக அமையும் என்பது முஸ்லிம்கள் மாத்திரமல்ல, முஸ்லிமல்லாதவர்களும் எதிர்பார்க்கும் ஒன்றாகும். எனவே, இஸ்லாமியப் பொருளாதாரத்தினைப் பின்பற்றினால் தீர்வு இருக்கிறது என்பதனை முஸ்லிம் சமூகம் நடைமுறை ரீதியாக நிரூபித்துக் காட்ட வேண்டும். அத்தோடு இஸ்லாமியப் பொருளாதாரக் கொள்கை பரவலாக அறிமுகம் செய்யப் பட வேண்டும். ஆனால் அது மிகத் தரமான முறையில் அமைய வேண்டும்.

இஸ்லாமியப் பொருளாதாரத்துடன் சம்பந்தமான நிறைய ஆய்வுகள் அறபுலகில் வெளிவந்துள்ளன. அவற்றை நாம் மொழிபெயர்த்து, அல்லது அதனைத் தழுவி எழுது வதனூடாக அவற்றைப் பரவலாக்கம் செய்யலாம். இஸ்லாமியப் பொருளா தாரத்தை நடைமுறைப் படுத்துவதனூடாக பொருளாதாரப் பிரச்சினையைக் கனிச மாகக் குறைக்கலாம் என்று முஸ்லிம் கிராமங்களில் நாங்கள் நடைமுறைப்படுத் திக் காட்ட வேண்டும். அது சாத் தியமானதுதான். அதற்கு ‘நபகா’ சிந்தனையை மிகச் சரியாக அமுல் படுத்த வேண்டும். நபகா என்பது ஒரு தனிநபர் யாருக்கெல் லாம் செலவுக்குப் பொறுப்பாக ஆகிறார் என்பதாகும்.

அடுத்தது, ‘மீராஸ்’ எனும் வாரிசுரிமையை சரியாக நடை முறைப்படுத்த வேண் டும். மேலும், ஸகாத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டும். இவற்றை மிகச் சரிவரச் செய்ய முடியுமென்றால் முஸ்லிம் சமூகத்தின் பொருளாதாரப் பிரச் சினை பெருமளவு தீர்ந்துவிடும். உதாரணமாக, எல்லாக் குடும்பத் திலும் ஒரு பெரிய பணக்காரர் இருக்கத்தான் செய்வார். அப்படி ஒவ்வொரு குடும்பத்திலு முள்ளவர்கள் தமது குடும்பங்களைப் பொறுப்பேற்பார்கள் என்றால் முஸ்லிம் குடும்பங்களில் பொருளாதாரப் பிரச்சினையை பெருமளவு குறைக்காலாம்.

ஸகாத் குறித்து பரவலாகப் பேசப்பட்டாலும் எந்த ஊரிலும் அது மிகச் சரியாக நடைமுறைப் படுத்தப்படுவதில்லை என்பதே எனது அவதானமாகும். அதனை இரண்டு வகையில் சொல்லலாம். ஒன்று, ஸகாத் அமைப்புக்களுக்கு அனைத்து செல்வந்தர்களும் தமது ஸகாத்தைக் கொடுப்பதில்லை. இரண்டாவது, ஸகாத் விதியாகும் எல்லாப் பொருட்களிலுமிருந்து ஸகாத் அறவிடப்படுவதில்லை. அதற்கு பிக்ஹு ரீதியான காரணங்களும் வேறு காரணங்களும் இருக்கின்றன.

அத்தோடு, நாங்கள் ஸகாத் வழங்கப்படும் எல்லையை ஒரு கிராமமாக சுருக்கி இருக்கின் றோம். ஸகாத் விநியோகத்தின் எல்லை விரிவுபடுத்தப்பட வேண் டும். இந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு ஸகாத் நடைமுறைப் படுத்தப்படுமானால் நிறைய முஸ்லிம் கிராமங்கள் ஓரளவு தன்னிறைவு பெற்ற கிராமங்களாக மாறும்.

இலங்கையில் இயங்குகின்ற இஸ்லாமிய வங்கிகளைப் பொறுத்த மட்டில் நான் அறிந்தவகையில் இஸ்லாமிய வங்கியைப் பற்றிய பூரண அறிவோடு அவை நடத்தப்படுகின்றன என்று சொல்வது கடினமானது. அத்தோடு அவை பெரும் பாலும் பணக்காரர்கள் மட்டும் உறவாடுகின்ற ஒரு நிறுவனமாகத்தான் இருக்கின் றது. சமூகத்தின் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் இஸ்லாமிய வங்கிக ளும் கவனம் செலுத்த வேண்டும்.

* இஸ்லாமிய அரசியலில் அண்மைக்காலப் போக்குகள் குறித்து...

இஸ்லாமிய அரசியல் சிந்தனைப்போக்கில் இரண்டு வகையான போக்குகள் இருக் கின்றன. ஒன்று, முற்றிலும் பாரம்பரிய சிந்தனையைப் பின்பற்றியது. இரண்டா வது புதிய ஆய்வுகளுடனும் நவீன சிந்தனைகளுடனும் தொடர்புபட்டது.

ஒரு சாரார் ஜனநாயகம் இஸ்லாத்திற்கு எதிரானது, பல இஸ்லாமியக் கட்சிகள் இருப்பது பிழையானது, தெரிவு செய்யப்படும் தலைவர் ஆயுள் பூராகவும் தலைமைத்து வத்தில் இருப்பார், பெண்கள் அரசியலில் ஈடுபட முடியாது என்கின்றனர். இதுதான் நான் சொன்ன பாரம்பரிய போக்கு என்பது. இது குறுகிய, தெளிவற்ற சிந்தனையின் விளைவாகும்.

அடுத்த சாரார் ஜனநாயகம் இஸ்லாத்திற்கு எதிரானது என்று சொல்ல மாட்டார்கள். அதன் வழிமுறைகளைப் பின்பற்றலாம், பல கட்சிகள் இருக்க லாம், பெண்கள் அரசியலுக்குவரலாம் என்கின்ற நவீன கருத்துக்களுடன் சேர்ந்து பயணிப்பவர்கள். இந்த இரண்டாவது சிந்தனைப் போக்கே அதிகமான நாடுகளில் தற்பொழுது வலுப்பெற்று வருகின்றது. இஸ்லாமிய அரசியல் குறித்து தற்காலத்தில் வெளி வருகின்ற அநேகமான புத்தகங்கள் இந்த சிந்தனையின் அடிப்படையிலேயே எழுதப்படுகின்றன. எகிப்து, சூடான், துருக்கி, குவைத், போன்ற நாடுகளில் போராடும் இஸ் லாமியக் கட்சிகள் இந்தப் புதிய சிந்தனைப் போக்கையே பின்பற்றுகின்றன. (Meelparvai)

இலங்கை முஸ்லிம் சமூகம் பெற்றுள்ள அரிதான புத்திஜீவிகளுள் Br. எம்.ஏ.எம். மன்ஸூர் (Plus*)முக்கியமானவர்.  Al-Madrassathul Jaamiya Naleemiyya வின் முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர். மீள்பார்வையின் ஸ்தாபகர்களுள் ஒருவர். அதன் முன்னாள் பிரதம ஆசிரியர். கடந்த இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக இஸ்லாமிய அழைப்புப் பணியில் ஈடுபட்டிருப்பவர். இஸ்லாமியக் கலைகளில் இவருக்கு இருக்கும் ஆழ்ந்த பரிச்சயம் அவரது தனித்திறமையாகும். தற்பொழுது அல்குர்ஆன் கற்கைகளுக்கான திறந்த கல்லூரியின் இயக்குநராக கடமையாற்றுகின்றார். அவருடன் மேற்கொண்ட நேர்காணலை வாசகர்களோடு பகிர்ந்து கொள்கிறோம்.

(NB: Plus* ; The Holy Quran says;....the man was created weak...4:28)

Home            Sri Lanka Think Tank-UK (Main Link)

No comments:

Post a Comment