Pages

Thursday 25 November 2010

அரசியல் பாடம் கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு

பொதுவாக அரச அறிவியல் அரசு பற்றிய விஞ்ஞானம் எனக் கொள்ளப்படு கின்றது. சமூக விஞ்ஞானங்களில் ஒன்றான அரசியல்ஆள்வோருக்கும் ஆளப்படுவோருக்கும் இடையிலான உறவுகளை ஆராய்கின்றது.

நவீன அரசறி வியலின் தந்தை அல்லது முதல் அரசியல் விஞ்ஞானி என அழைக்கப் படும் அரிஸ்டோட்டில் அரசியலை மாஸ்டர் ஒப் சயன்ஸ் (Master of Secience) என அழைத்தார்.
அரசியல் மனித நடத்தைகள் பற்றி ஆய்வு செய்வதால் அதனை சமூக விஞ் ஞானமாகக் கருதுகின்றனர். ஆயினும்அரசியல் எவ்வ ளவு தூரம் விஞ் ஞானத் தன்மை கொண்டது என்பதில் அரசியல் சிந்தனையாளர்களிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. நவீன அரச அறிவியலின் தோற்றம் கிரேக்க காலம் அளவுக்கு பழைமை வாய்ந்தது எனக் கூறப்படுகின்றது.
கிரேக்க நகர அரசுகளே இன் றைய மேலைய ஜனநாயகத்தின் முன்னோடிகள் என்று கருதப்படு கின்றன. Politics என்ற பதம் கிரேக்க கால சமுதாய அமைப்பினைக் கொண்டே பொருள் கொள்ளப் படுகின்றது. Politics என்ற ஆங்கி லப் பதம் கிரேக்கத்தின் புராதன எதன்ஸிய நகர அரசுகளை (City States) குறிக்கவே முதலில் பயன் படுத்தப்பட்டது. அடிப்படையில் இச்சொல் Polis எனும் லத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்டுள் ளது.
பண்டைய கிரேக்க அரசிய லின் அடிப்படை அலகாகவும் சமூக வாழ்வில் சுயதேவைப் பூர்த் தியுடைய அலகாகவும் விளங் கிய இந்நகர அரசுகள்மனித மேம்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் சிறந்ததோர் ஒழுங்கமைப்பு என்று புகழப்படுகின்றது. எனவேஇந் நகர அரசுகளின் கீழ் வாழ்ந்த மக்களினதும் மக்கள் தலைவர் களதும் நடவடிக்கைகள் பற்றிய ஆய்வும் விவரணமுமே அரச அறிவியல் என பொருள் கொள் ளப்பட்டது.
இடைக்காலத்தில் கிறிஸ்தவ மதகுழுக்கள் மற்றும் திருச் சபை யின் அதிகா ரத்தின் கீழ் அரசியல் அதிகாரம் பற்றிய கருத்துகளில் மாற்றம் ஏற்பட்டன. மத்திய காலத் தில் தெய்வீக உரிமைக் கோட் பாடு (Theory of Devine Right) திருச் சபைகளால் பின்பற்றப்பட்டன. இதே காலப் பிரிவில் ஷரீஆவின் அடிப்படை யிலான இஸ்லாமிய ஆட்சியும் அரசாங்கமும் உலகின் பல பாகங்களில் நிலைபெற்றிருந்தது. அது இறைவனின் அதிகா ரத்தை மக்களூடாக நடைமுறைப் படுத்தி மனித நாகரிகத்திற்கும் முன்னேற்றத்திற்கும் அளப் பெரும் பங்களித்தது. ஆயினும் இவ்வரலாறு பாடப் புத்தகங்க ளிலிருந்து அப்புறப் படுத்தப்பட்டுள்ளது.
தொடக்க காலம் முதல் சமகாலம் வரை அரசறிவியலின் உட் பொருள் மற் றும் உள்ளடக்கம் பற்றிய மாறுபட்ட கருத்துகள்வரைவிலக்கணங்கள் முன்வைக் கப்பட்டு வந்துள்ளன. அரசு பற்றிய விஞ்ஞானமே அரசியல் என நவீன காலத்தில் கருதப்பட்டது. பின்னர் அரசுகள்நிறுவனங் கள்அமைப் புகள்கோட்பாடுகள்  பற்றிய கல்வியே அரசி யல் எனக் கூறப்பட்டது. Bluntchili, Garner, Gettal, Frankfood, Polloc, Strong முதலியோர் இவ்விளக் கத்தை முன் வைத்தனர்.
1950களுக்குப் பின்னர் இக் கருத்திலும் மாறுதல் ஏற்பட் டது. அரசாங்கம் அதன் நிறுவ னங்கள்அவற்றின் நடவடிக் கைகளை மையமாகக் கொண்டு அரசியலுக்கு விளக்கமளிக்கும் மரபு தோன்றியது. சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட அர சாங்கம் ஒன்றை மையப்படுத்திய அரசொன்றின் அலுவல்களின் ஒரு பகுதியே அரசியல் என்றும்,அரசாங்கத்தின் தீர்மானமெடுக் கும் மையங்களைச் சூழ நிகழு கின்ற நிகழ்வுகள் பற்றிய ஒரு கற்கைநெறி என்றும்,நாகரிகம டைந்த ஒரு சமூகத்தில் அரசாங் கம்அதன் அடிப்படைச் சட்டங்கள்மக்கள் ஒருவரோடு ஒருவர் கொண்டுள்ள தொடர்புகள்அவ ற்றை வகுத்தளிக்கின்ற நியதிகள்சமூக நிலமைகள்அவற்றின் குறிக் கோள் கள் என்பன பற்றி ஆய்வு செய்யும் அறிவுத் துறையே அரசியல் என Seely, Alfred De Grazia, Stephen, Lealock போன்றோர் விளக்கமளிக்கின்றனர். அரசாங் கம் பற்றிய ஆய்வே அரச அறிவி யல் என்பது இவர்கள் முன்வைக் கும் விளக்கத்தின் சாரமாகும்.
தொடக்க காலத்தில் அரசியல்வரலாற்று கற்கை நெறியுடன் இணைக்கப் பட்டே மேலைநாட்டுப் பல்கலைக்கழகங்களில் கற்பிக்கப்பட்டது. 1903ல் அமெரிக்காவில் நிறுவப்பட்ட அரசியல் விஞ்ஞானக் கழகத்தினால் அரசியல் விஞ்ஞானம் ஒரு தனித்துவமான கற்கை நெறியாகவும் சமூக விஞ்ஞானமாக வும் அறிமுகப் படுத்தப்பட்டு வளர்க்கப்பட்டது. அரசறிவியல் ஆய்வு முறை கள் விரிவுபடுத்தப்பட்டதோடு பாடப்பரப்பும் உள்ளடக்கமும் விரிவு படுத்தப்பட் டது. யுனெஸ்கோ வின் அனுசரணையில் வடிவமைக்கப்பட்ட அரசறிவியல் கற்கை நெறிஅரசாங்கம்,அரசியல் கோட்பாடுகள்சர்வதேச உறவுகள் ஆகிய வற்றுக்கு முக்கியத்துவம் அளித்தது. அரசறிவியலின் பிரதான பாடப் பரப்பு பின்வருவனவற்றை உள்ளடக்கி வடிவமைக்கப்பட்டது.
1.      அரசியல் கோட்பாடுகள்வகை மாதிரிகள்
2.      தேசிய அரசும் அரசாங்கமும்
3.      பொது நிருவாகம்
4.      ஒப்பீட்டு அரசாங்கமும் அரசியலும்
5.      சர்வதேச உறவுகள்
இப்பாடப் பரப்பில் அரசு எவ் வாறு தோன்றியது என்பது தொடர்பான ஐந்து பிரதான கோட்பாடுகள் கற்பிக்கப்படு கின்றன. அவை பின்வருமாறு:
1.      தெய்வீக உரிமைக் கோட்பாடு (Devine Right Theory)
2.      சமுதாய ஒப்பந்தக் கோட்பாடு ((Social Contract Theory)
3.      பலவந்தக் கோட்பாடு (Force Theory)
4.      வரலாற்று அல்லது பரிணாம விளக்கக் கோட்பாடு (The Historical or evolutionary Theory)
5.      அரசு பற்றிய மாக்ஸிய கொள்கை (The State Theory of Marxism)
மேற்போந்தவற்றில் சில இஸ் லாத்தின் அரசியல் சிந்தனைக்கு முற்றிலும் முரணானவையாகும். வேறு சில கோட்பாடுகளுக்கு இஸ்லாமிய அரசியல் சிந்தனை யாளர்களின் முன்னோடி முயற்சி கள் பங்களிப்புச் செய்துள்ளன. எவ்வாறாயினும்மேலைத்தேய அரசியல் விஞ்ஞானம் வளர்ச்சி யடைந்து வருகின்றபோதும் அதனை இஸ்லாமிய மயமாக்க வேண்டும் என்ற கருத்து தற் போது வலுவடைந்து வருகின்றது.
ஜனநாயகம்இறைமைதேர்தல் முறைஅரசியல் அமைப் பாக்கம்சட்டத் தின் ஆட்சி ஆகிய அம்சங்களில் இஸ்லாத்திற்கும் மேலைத் தேய அரசியல் சிந்த னைக்கும் இடையில் கணிசமான ஒற்றுமைகள் காணப்படினும் பாரதூர மான முரண்பாடுகளும் உள்ளன. இம்மோதுகை அம்சங் களை (Area of Conflict) அடையாளம் காண்பதற்கும் இஸ்லாம் அவற்றை எவ்வாறு நோக்குகின் றது என்பதைப் புரிந்துகொள்ளவ தற்கும் பாடப் புத்தக்கத்தின் உள் ளடக்கத்திலிருந்து சில பகுதிகளை அடுத்த இதழில் நோக்குவோம். (meelparvai)

Home           Sri Lanka Think Tank-UK (Main Link)