Pages

Saturday 4 May 2013

Azath Salley Arrested; இதுவரை வேறு எந்த முஸ்லிம் அரசியல்வாதியும் எங்களுக்கு ஆறுதல் கூறவில்லை




முஸ்லிம் சமூக தலைவர்களுள் அமைச்சர் றிசாத் பதியுதீன் மாத்திரம் வெளிநாட்டில் இருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமக்கு ஆறுதல் கூறினார் எனவும் இதுவரை வேறு எந்த முஸ்லிம் அரசியல்வாதியும் எங்களுக்கு ஆறுதல் கூறவில்லை என்றும் அசாத் சாலியின் புதல்வி தெரிவித்துள்ளார்

 அசாத் சாலியை எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுதலை செய்யுமாறு அமைச்சர் ரிஷாத் கோரிக்கை!

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நான்காம் மாடியில் தடுத்து வைக்கப்பட்டிருகின்ற கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலியை எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுதலை செய்யுமாறு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வெளிநாட்டில் இருந்து அரசை வலியுறுத்தியுள்ளார்.

முஸ்லிம்களுக்கு எதிராக பல்வேறு ஆர்ப்பாட்டங்களையும் நெருக்கடிகளையும் மேற்கொண்டு நாட்டின் அசாதாராண நிலைக்கு குந்தகம் விளைவித்துள்ள பொது பல சேனா உள்ளிட்ட இனவாத அமைப்பினர் எவரையும் இதுவரை கைது செய்யாமல் அவர்களது இனவாத நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் எழுப்பி வந்த ஒருவரை கைது செய்திருப்பதானது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத ஒரு செயலாகும் எனவும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை அசாத் சாலி கைது செய்யப்பட்டதை அடுத்து சிங்கள சமூகத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகளான ரவி கருணாநாயக்கா, டாக்டர் ஜெயலத் ஜெயவர்த்தனா, கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்தினா உள்ளிட்ட அரசியல்வாதிகள் ஆஸாத் சாலியின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறியுள்ளனர்.

எனினும் முஸ்லிம் சமூக தலைவர்களுள் அமைச்சர் றிசாத் பதியுதீன் மாத்திரம் வெளிநாட்டில் இருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமக்கு ஆறுதல் கூறினார் எனவும் இதுவரை வேறு எந்த முஸ்லிம் அரசியல்வாதியும் எங்களுக்கு ஆறுதல் கூறவில்லை என்றும் அசாத் சாலியின் புதல்வி தெரிவித்துள்ளார். (Via FB)


2/2


ஜம்மியத்துல் உலமாவின் கவனத்துக்கு!

எங்கள் மதிப்பிற்குரிய ரிஸ்வி முப்தி அவர்களே நபிமார்களின் வாரிசுகளான
உங்கள் உலமா சபைக்கு கட்டுப்பட்டு நாங்கள் நடந்தோம் நீங்கள் இக்கட்டான
சூழலில் சிக்குண்டு இருந்த வேலை உங்களுக்காக குரல் கொடுத்தவர் இன்று
கைதுசெய்யப்பட்டு கூண்டுக்குல் உள்ளார்.

சமூகம் அச்சுறுத்தப்பட்டு பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டு எங்கள் சகோதரிகளின் பர்தாக்கள் கலட்டப்பட்டவேளை நாங்கள் பாராளுமன்றம் அனுப்பிய பெறுப்புள்ள தலைமைகள் வாய்கள் பொத்திபொந்துக்குள் எலிகளெனப் புகுந்த வேளைஇறுக்கமுடன் சமூகத்திற்காய் குரல் எழுப்பி
இனவாத சக்திகளின் முகத்தின் திரையைஅறுத்தெடுத்த ஆஸாத் சாலிஅரசாங்கத் தரப்பினரால் கைதி ஆனார் . பொறுக்காமல் உளம் நொந்து புலம்புகின்றோம். 

அவருக்காக கூட்டுதுஆ பள்ளி வாசல் தோறும் ஐ வேலை தொழுகையின் பின் கேட்டால் எங்கள் உள்ளம் ஆறுதல் அடையும் குனூத் ஓத சொன்னீர்கள் ஓதினோம் நிறுத்த சொன்னிர்கள் நிறுத்தினோம் தலைவரெனச் சொன்னவர்கள் தயங்கி நின்றுதலை சொறிந்து தன் மானம் இழந்த வேளை தலை கொடுத்த ஆஸாத் சாலியை விலையேதும்; கொடுத்தேனும் மீட் டெடுக்கவிரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.அலையெனவே திரளுகின்ற மக்க ளெல்லாம்அல்லாஹ்விடம் இருகரத்தை ஏந்த வேண்டும் அல்லாஹ்வை அன்றி வேறெதற்கும் பயப்படாதவன் ஆசாத் சாலி நபிகளின் வாரிசுகளான நீங்களும் அஞ்ச மாட்டீர்கள் 

கண்டன அறிக்கையாவது விடுவீர்களா ?!!!

Home

No comments:

Post a Comment