Pages

Monday 6 May 2013

அசாத் சாலி உண்ணா விரதத்தை கைவிடவில்லை: மகள் அமீனா

1/2
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள அசாத் சாலி உண்ணாநோன்பைக் கைவிட்டுவிட்டதாக அரசாங்கம் கூறியுள்ள போதிலும் அசாத் சாலி தனது உண்ணா விரதத்தை கைவிடவில்லை என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

தமிழ் முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் கொழும்பு மாநகரசபையின் முன்னாள் பிரதி மேயருமான அசாத் சாலி, கடந்த வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்டது முதல் உண்ணாநோன்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.

நேற்று மாலைமுதல் உண்ணாநோன்பைக் கைவிட்டுவிட்டதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்ல இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகங்கவியலாளர் மாநாட்டில் தெரிவித்திருந்தார்.

ஆனால், அசாத் சாலியின் உடல்நிலை இன்றும் மோசமடைந்துள்ளதாகவும் அவர் இன்னும் உண்ணா விரதத்தை கைவிடவில்லை என்றும் அவரது மகள் அமீனா சாலி தெரிவித்தார்.

இதேவளை, அசாத் சாலி மீண்டும் உடல் நிலை பாதிப்பு காரணமாக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன..

அவர் ஏற்கனவே கடந்த வௌ்ளிக்கிழமை உடநல நிலை குறைவுகாரணமாக கொழும்பு தேசிய வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகளுக்கு பின்னர் நேற்றைய தினம் வைத்திய சாலையிலிருந்து வெ ளியேறியிருந்தார். எனினும் மீண்டும் இன்று பிற்பகல் 4 மணியளவில் கொழும்பு தேசிய வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


2/2
 மருந்து உட்கொள்ள அசாத் சாலி மறுப்பு!!!!

சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அசாத் சாலி வைத்தியர்களால் வழங்கப்படும் மருந்து மற்றும் உணவினை உட்கொள்ள தொடர்ந்தும் மறுத்துவருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் ஊடகம் ஒன்றிடமே அவர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் குற்றப்புலனய்வுப்பொலிசாரினால் கைது செய்யப்பட முன்னாள் கொழும்பு மா நகர சபையின் பிரதி மேயர் அசாத் சாலி சுமார் 30 மணித்தியாலங்கள் வரையில் உணவு,நீர் உட்கொள்ளாது இருந்துவந்ததை தொடர்ந்து உடல் நிலையில் ஏற்பட்ட நலக்குறைவு காரணமாக நேற்று தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையிலேயே குறித்த வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர் அசாத் சாலி மருந்து சாப்பிட மறுத்துவருவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Home

No comments:

Post a Comment