Pages

Sunday 19 August 2012

India; காஷ்மீர் முதல் கூடங்குளம் வரை

1/


 Shame on such kind of INDIAN. .Where is police Dept.?,Court?,Media?,Govt?.Learn to Give Respect...

2/
 காஷ்மீர் முதல் கூடங்குளம் வரை என்ன அருகதை இருக்கு சுதந்திரம் கொண்டாட?

நண்பர் தம்பி சதீஸ் செல்லத்துரை எழுதி ஒரு கட்டுரை அதை உங்களுக்கு பகிர்வு செய்கிறேன். ஒட்டு மொத்த இந்தியாவும் சுதந்திர தினம் சொக்கபானைனு கொண்டாடுறோம் .நாம அடுத்தவங்களுக்கு சுதந்திரம் கொடுக்கோமா?காஷ்மீர் என்பது தனி நாடு என்று சொன்னால் சுதந்திரமாய் அடியும் உதையும் விழும்.சரி காஷ்மீர் சுதந்தர இந்தியாவின் ஒரு பகுதி என்றால் அவங்க எவ்வளவு சுதந்திரத்துடன் இருக்காங்க என்று அறீவிர்களா?கூடங்குளத்தில் 144..நமக்காக போராடும் அவங்க சுதந்திரத்தை யோசித்தோமா?

நீங்கள் அனுபவித்து பாருங்களேன் இப்படியெல்லாம் உங்கள் ஊரில் நடந்தால் எப்படி இருக்கும் என்று?

மாலை இருட்டிய பின் காஷ்மீரில் யாரும் வெளியே சுற்ற முடியாது. ராத்திரி நேரம் கருத்தரங்கம் போறேன் பதிவர் கூட்டம் நடத்துறேன்னு திரிஞ்சா அப்ப்புறம் மார்ச்சுவரி போஸ்ட் மார்ட்டம்தான்.அதாவது காலை விடிந்தது முதல் மாலை இருட்டும் வரை மட்டுமே நீங்கள் சாலையில் நடமாட முடியும்.

பகலிலும் அடையாள அட்டை இல்லாமல் சென்றால் சந்தேகத்தின் பேரில் நீங்கள் கைது செய்யப்படலாம்.அடையாள அட்டைகளை ரயில் பயணங்களில் எவ்வளவு நியாபகமாக எரிச்சலோடு எடுத்து செல்கிறோம் நாம்?மறந்து போனால் கைது என்று அறிவித்தால் எப்படி இருக்கும்?

வாகன சோதனை என்ற பெயரில் உங்களின் வாகனமும் நீங்களும் பலமுறை சோதனை செய்யப்படும்போதும் தாமதப்படுத்தும்போதும் எப்படி உணர்வீர்கள்?சுதந்திரமாக?

போர்வைக்குள் குறுந்தகவல் அனுப்பும் அன்பர்களே போராட்ட பரப்புரை செய்யும் நண்பர்களே அங்கே இந்த பருப்பெல்லாம் வேகாது.காஷ்மீரில் குறுந்தகவல் தடை என்பதை அறிவீர்களா?ஒரே நாடு ஒரே சிம் என்று புரட்சி செய்யும் இந்தியா காஷ்மீர் சிம் கார்டுகள் ஜம்மு காஷ்மீர் தவிர்த்து எங்கேயும் செயல்பட அனுமதிப்பதில்லை.அப்படின்னா
காஷ்மீர் தேசம் தனி என்பதை ஒப்பு கொள்வீர்களா?

உங்கள் ஊரை எப்போது வேண்டுமானாலும் முற்றுகை இடலாம் முடக்கி வைக்கலாம் சோதனை போடலாம் என்றால் சம்மதிப்பீர்களா?அவ்வாறு செய்யும்போது பெண்களிடம் கொஞ்சம் அப்படி இப்படி என்று நடைபெற்றால் கண்மூடிக்கொள்வோமா?இல்லை கொல்வோமா?

கடைகளில் செய்திதாளால் சுற்றப்பட்டு கருப்பு பாலிதீனில் வைத்து தரப்படும் நாப்கின் வைத்துள்ள கைப்பையை வேறு ஆண்களிடம் தருவீர்களா சகோதரிகளே? வாகன சோதனையின் போது அவ்வாறு வேற்று மனிதன் தன் கைப்பையை சோதனையின் பேரில் திறப்பதும் நாப்கினை எடுத்து பிதுக்கி பார்க்கும்போது உணரும் அவமானமும் வெறுப்பும் நீங்கள் அனுபவித்ததுண்டா சகோதரிகளே?

உங்களால் பாதுகாப்புபடை வாகனங்களை மீறி சாலையில் வண்டி ஓட்ட முடியாது.எதிர் பாரா விதமாக நீங்கள் பாதுகாப்பு படை வீரர்களின் வாகனங்களுக்கு வழி தரவில்லை என்றால் பலவித மொழிகளில் உங்கள் பிறப்பு சந்தேகிக்கப்படும்.பதில் பேசும் பட்சம் தாக்கப்படுவீர்கள்.

சந்தேகக் கைதுகளில் தாக்கப்பட்டு உயிரிழக்கும் காஷ்மீரிகளுக்கு குரல் எழுப்ப முடியாது.எழுப்பினால் நமது வீட்டு தொலைக்காட்சிகள் காஷ்மீரில் கலவரம் என்று கலகம் செய்யும்.நாமும் துலுக்க பயலுவளுக்கு வேற வேலை இல்லை என்று மென்று துப்புவோம்.வாழ்க சுதந்திரம்.

கைது செய்யப்பட்ட காஷ்மீரி மனிதர் 35 வயதுக்கு மேல் இருக்கும்.ஆயுதங்கள் எங்கே உள்ளன என்று பல விதங்களில் விசாரணை.அடி உதைக்கு பயந்து அவர் சும்மானாச்சும் ஓரிடம் சொல்லி கொஞ்ச நேரம் தப்பித்து மூச்சு வாங்க ஏமாந்து திரும்பிய நாங்கள் அவரை முதலில் நிர்வாணப்படுத்தி மல்லாக்க படுக்க வைத்தோம். ஏசு போல கை கால்களை விரித்து வைத்து ஒவ்வொரு கை கால்களின் மேல் ஆளுக்கொருவர் ஏறி நின்று கொள்ள வலுக்கட்டாயமாக திறக்கப்பட்ட அவர் வாயில் வாளி வாளியாக குளிர்ந்த தண்ணீர் மூச்சு திணற திணற ஊற்றப்பட்டது.வாய் மூடாமல் கெட்டியாக பிடித்து கொண்ட பாவிகளில் ஒருவன் நான்.நீர் நிறைந்த அந்த வாய் மூச்சு காற்றை கேட்குமா? தேசிய கீதம் பாடுமா?

எனது அதிகாரி ஒருவர் மாலையில் சிலரை பிடித்து கொண்டு வந்து தேநீர் கொடுத்து பாயாசம் கொடுத்து அப்புறமாக இரவினில் அடித்து துவைப்பார்.அது அவர் சுதந்திரமாம்.

இப்படி குரல்வளையை இறுக்கி பிடித்து கொண்டு கருத்து சுதந்திரம் தருகிறேன் பேசுங்கள் ஆனால் செயல்படுத்த முடியாது என்பது எப்படி உண்மையான சுதந்திரம் ஆகும்?அதை கொண்டாடுங்கள் என்றால் மனசார எப்படி முடியும்?

காஷ்மீர் மட்டும் இல்லை மணிப்பூர் சத்தீஷ்கர், இப்படி அநேக இடங்களில் இந்தியாவில் சுதந்திரம் கேள்விக்குறியாகவே உள்ளது.இந்த நிலையில் அவர்களை கொடி பிடித்து கொண்டாடுங்கள் என்பது எப்படி?இன்று கூடங்குளமும் கருப்பு கொடி ஏந்தியுள்ளது.

கூடங்குள மக்களும் இந்த சுதந்திர தினத்தை புறக்கணிக்க முடிவு செய்துள்ளார்கள்.அவர்கள் வேறு யாருக்கோ போராடவில்லை.நம் எதிர்கால சந்ததிகளுக்காக அமைதியான முறையில் போராடும் அவர்களின் கோரிக்கைக்கு இந்திய அரசு என்ன பதில் கொடுக்கிறது?144ம் காவதுறை குவிப்புமா?
மணிப்பூரில் சர்மிளாக்கு என்ன பதில் தருகிறது இந்தியா?ஆயுத போராட்டம் ,அகிம்சை போராட்டம் எதுவுமே இந்திய செவிட்டு காதுகளுக்கு கேட்காத போது என்ன செய்வான் சாதாரண மனிதன்?புறக்கணிப்பை விட பெரிய ஆயுதம் எதுவுமில்லை என்றே எனக்கு தோன்றுகிறது.அன்று காந்திக்கும் தோன்றியது போல...ஒத்துழையாமை இயக்கம்.

இந்திய அரசின் மாற்றாந்தாய் மனப்போக்குதான் இன்று தமிழகத்திலும் கருப்பு கொடி ஏற்ற வைக்கிறது.காவேரி தண்ணீர்,முல்லை பெரியாறு,கூடங்குளம், இலங்கையால் தமிழக மீனவர்கள் கொல்லப்படும் அநியாயம்,ஈழப் படுகொலைகள் என்று அனைத்து பக்கமும் தமிழகத்தை புறக்கணிக்கும் இந்திய அரசுக்கு எப்படித்தான் நமது எதிர்ப்பை தெரிவிப்பது? அதன் ஆரம்பம்தான் கூடங்குளத்தில் ஆகஸ்ட் 15ல் கருப்புக்கொடி ஏற்றப்படும்.

அதற்காக இந்தியாவை உடைப்பதா? அது எப்படி என்று பொறுக்க முடியும்? இதற்கான அருந்ததி ராயின் அழகான பதில் படிக்க இங்கே சிரமம் பார்க்காமல் சுட்டவும்

https://www.facebook.com/

photo.php?fbid=127755064035
196&set=a.124252887718747.33392.100004021101835&type=1&theater

அதெல்லாம் இருக்கட்டும் நண்பர்களே எங்கள்(எல்லை பாதுகாப்பு படை) சுதந்திரத்தை கேப்பீர்களா? சில நாட்களுக்கு முன் நான் தந்த முக நூல் நிலைத் தகவலை படிக்கவும்.

DOCTOR OF BORDER SECURITY FORCE TRAINING CENTRE JODHPUR (NOT MUNNA BHAI MBBS) SAYS TO OFFICER'S COLONY GATE GUARD...

##"...IF ANY PERSONS OTHER THEN OFFICER RANK ARE(CONSTABLE& HC CONSTABLE) NOT ALLOWED TO RIDE A BICYCLE INSIDE THE OFFICER'S COLONY ... THEY SHOULD GO BY WALK WITH THEIR CYCLE....##"WEATHER WE ARE LIVING IN DEMOCRACY COUNTRY OR NOT? WHICH ACT&RULE SAID ABOUT THIS?


இது எப்படி இருக்கு ? எப்படிங்க சுதந்திர தினம் கொண்டாட?

சக மனிதர்களின் உரிமைகளின் மேல் கொண்டாடப்படும் கொண்டாட்டங்கள் இப்படித்தான் இருக்கும்.கீழே காணும் கொண்டாட்டத்திற்கும் நாளை தொலைக்காட்சி சகிதம் நாம் கொண்டாடப்போகும் கொண்டாட்டத்திற்கும் என்ன வித்தியாசம் இருக்கும்?கார்ப்பரேட் உலகின் ஆட்சியில் மறைமுக அடிமையாய் இருக்கும் இந்திய அரசை நாம் இந்த கொண்டாட்டத்தின் மூலம் ஆதரிக்கிறோம் நண்பர்களே.

இதைத்தானே கேட்டாய் பாலகுமாரா ....

நான் கூடன்குளத்து போராட்டத்தை,காஷ்மீர் தேசத்து அடிமை மக்களின் உரிமை போராட்டத்தை,சட்டீஸ்க்கரில்

போராடும் பழங்குடி இனத்தின் போராட்டத்தை,சர்மிளாவின் போராட்டத்தை ஆதரிக்கிறேன்.இவர்களை ராணுவம் மற்றும் காவல் துறை கொண்டு அடக்கி ஒடுக்கும் இந்திய அரசுக்கு இந்த சுதந்திர தின கொண்டாட்டத்தை புறக்கணிப்பதன் மூலம் நான் எனது எதிர்ப்பை அறிவிக்க விரும்புகிறேன்.

வரும் காலங்களில் ஓட்டு மொத்த தமிழகமும் தேர்தல்களை, சுதந்திர தின கொண்டாட்டங்களை புறக்கணிப்பதன் மூலம் காவேரி நீர் முல்லை பெரியாறு,ராமேஸ்வரம் மீனவர்கள் படுகொலைகளுக்கு ,கூடங்குளத்திற்க்கு நீதி பெற முடியும் என நம்புகிறேன்.ஓட்டு மொத்த தமிழகமும் இணைந்தால் மட்டுமே இது முடியும்.கூண்டுக்குள் அடைத்து வைத்து பாட சொல்லி ஆட சொல்லி கேப்பது போலத்தான் காஷ்மீர் மக்களிடம் நாம் எதிர்பார்ப்பது.காஷ்மீராகட்

டும்,சட்டீஷ்கராகட்டும் இறப்பது என்னவோ ஏழை மக்களும் ஏழை சிப்பாயும்தான்.உங்களுக்கென
்ன நீங்கள் கொண்டாடுங்கள்.

ஆகஸ்ட் 14கை நாகலாந்தில் சுதந்திர தினமாக கொண்டாடுகிறார்கள் என்று கேள்விப்பட்டேன்.அது குறித்து அறிந்தவர்கள் தகவல் தரலாம்.

மனதில் தோன்றியது எழுதி விட்டேன்.இதோ எனது தோழன் இதை படித்துவிட்டு திட்டி செல்கிறான்.என் மனைவி எனக்கு ஏதோ நோய் இருப்பதாய் சொல்கிறார்.எனது உடன் பிறந்த அண்ணன் நாட்டை அவமானப்படுத்துகிரவன் தன் தாயை அவமானபடுத்துகிறான் என்று கமென்ட் செய்கிறான்.அளவுக்கு மீறிய தேச பற்று நமக்கும் சக மனிதனுக்கும் இழைக்கும் கொடுமைகளை மறைக்க கூடாது.என்னை துரோகி என்று அழைப்பீர்கள் என்றால் எவ்வித சங்கடமும் இல்லாமல் வரவேற்பேன்.

டிஸ்கி;ஆர்ப்பாட்டமான கொண்டாட்டங்கள் போராட்டங்களின் வலியை புரிந்து கொள்வது கஷ்டமே.சுதந்திர போராட்ட வீரர்களின் ஆன்மா ஒரு நாளும் கார்ப்பரேட் அடிமை அரசுகளை மன்னிக்காது. (நன்றி; தம்பி ரௌத்திரம் பழகு)
Home

No comments:

Post a Comment