Pages

Thursday 9 August 2012

Is Law and Order out off order in Sri Lanka...?

1/


2/
தம்புள்ளை நகர அபிவிருத்தியை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை

தம்புள்ளை நகர அபிவிருத்தி மற்றும் புண்ணிய பூமி அபிவிருத்தி நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார். ரங்கிரி தம்புள்ளை ரஜமகா விஹாரைக்கு சென்று இன்றையதினம் வழிபாடுகளில் ஈடுபட்டதை அடுத்தே ஜனாதிபதி இந்தப் பணிப்புரையை விடுத்துள்ளார்.

தம்புள்ளை நகர அபிவிருத்தி நடவட
ிக்கைகளை துரிதப்படுத்துமாறு ரங்கிரி தம்புள்ளை விஹாராதிபதி இனாமலுவே ஸ்ரீ சுமங்கல தேரர், ஜனாதிபதியிடம் இதன்போது கோரிக்கைவிடுத்துள்ளார்.

நகர அபிவிருத்தி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலும், அதில் சில குறைபாடுகள் உள்ளதாக சுமங்கல தேரர் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனையடுத்து தொலைபேசி ஊடாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவரை தொடர்புகொண்ட ஜனாதிபதி அந்த நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு பணிப்புரை வழங்கியுள்ளார்.

இன்று(நேற்று) முற்பகல் கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வழிபாடுகளில் ஈடுபட்டார்.

அதன் பின்னர் அங்கு வருகை தந்திருந்த பக்தர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடினார்.இதனையடுத்
து அஸ்கிரி மற்றும் மல்வத்து பீடங்களின் மஹாநாயக்க தேரர்களையும் சந்தித்து ஜனாதிபதி ஆசிபெற்றார்.-சக்தி நியூஸ்:

குறிப்பு:இது செய்தி தொடர்பாக எமக்கு கருத்துரைத்த முன்னணி சமூக,அரசியல் ஆய்வாளர் ஒருவர் புனித பூமி அபிவிருத்தி என்பதும் அதை துரிதப் படுத்துவம் என்பது இலங்கையில் சாதாரண அபிவிருத்தி நடவடிக்கையாகத்தான் பார்க்க முடியும் ஆனால் அந்த அபிவிருத்தி இன்னொன்றின் அழிவுக்கு வழிவகுக்காமல் இருக்க வேண்டும் , குறிப்பாக தம்புள்ள மஸ்ஜித் அகற்றம்படும் அச்சம் நிலவும் சூழ்நிலையில் நகர அபிவிருத் தொடர்பான தெளிவுபடுதளுடன் அது முன்னெடுக்கப்பட வேண்டும்.

புனித பூமி அபிவிருத்தி மஸ்ஜிதை அங்கிருந்து அகற்றாது என்பது தெளிவாக முன்வைக்கப்படவேண்டும் , அப்போது சந்தேகங்ககுள் களையப்படும் என்று தெரிவித்தார்.

Home           Sri Lanka Think Tan-UK (Main Link)

No comments:

Post a Comment