Pages

Monday 7 March 2011

முஸ்லிம் அரசியல் கட்சிகளுக்கு ஒரு எச்சரிக்கை

Sri Lanka-அக்கரைப்பற்று பிரதேசத்தில் உள்ளுராச்சி தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஆதரவாளர்களுக்கும் அமைச்சர் அதாவுல்லாஹ்வின் கட்சியான தேசிய காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆதரவாளர்களுக்கும் இடையில் இரு தினங்களுக்கு முன்னர் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது இதை போலீஸ் மற்றும் இராணுவம் தலையிட்டு நிலைமையை கட்டுப் படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று செய்திகள் தெரிவித்தன இது தொடர்பாக தெரியவருவதாவது.


ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் கலந்து கொண்ட தேர்தல் பிரச்சார மேடையில் இருந்து ஒலிபெருக்கி மூலம் ஒளிபரப்பான பிரச்சார உரைகளை குழப்பும் முகமாக முஸ்லிம் காங்கிரஸ் பிரச்சார மேடைக்கு அண்மையில் இருந்த மஸ்ஜித்தின் மீது ஏறிய தேசிய காங்கிரஸ் உறுப்பினர்கள் அல்லது ஆதரவாளர்கள் அதன் ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி பிரச்சார உரைகளை குழப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது இதில் யார் உண்மையான குற்றவாளிகள் என்பதை ஆராய முன்னர் சில விடையங்கள் சுட்டிகாட்டப்படவேண்டும் விரிவாக பார்க்க
கட்சி போட்டி காரணமாக மஸ்ஜிதின் வளங்களை பயன்படுத்துவது அது யாராக இருந்தாலும் எந்த கட்சி ஆதரவாளர்களாக இருப்பினும் அது பாரிய குற்றமா முஸ்லிம் சமூகம் பார்க்கின்றது என்பதை சமந்தப்பட்ட முஸ்லிம் அரசியல் கட்சிகள் விளங்கிக்கொள்ளவேண்டும் மற்றவர் தேர்தல் பிரச்சாரத்தை குழப்புதல் மஸ்ஜித்தை முறைகேடான முறையில் பயன்படுத்துதல் போன்ற வற்றை முஸ்லிம் சமூகம் இஸ்லாமிய பண்புகளுக்கு விரோதமான முறைகேடான செயலாக பார்த காலம் மறைந்து இன்று அவற்றை பகிரங்கமாக எதிர்க்கும் நிலை ஏற்பட்டுவருகின்றது என்பதை அரசியல் தலைமைகள் உணர தவறும் போது அவர்களை சமூகம் விரைவில் ஒதுக்கி விடும் என்று கூறுவதில் எனக்கு ஐயம் இல்லை
இஸ்லாமிய விளிமியங்களை மதிக்காத நபர்களையும் கட்சிகளையும் முஸ்லிம் சமூகம் தொடர்ந்து தாங்கி பிடிக்காது என்பதை பல்கலை கழக முஸ்லிம் இளைஞர்களுடன் தினமும் பழகி வருபவன் எனறவகையிலும் பொதுவாக முஸ்லிம் இளைஞர்களுடன் நெருங்கிய உறவு கொண்டவன் என்ற வகையிலும் என்னால் முடிகின்றது.
முஸ்லிம் அரசியல் கட்சிகள் உணர்ந்து செயல்படவேண்டும் சமூகத்துக்குள் வன்முறையை தூண்டுதல் , அமைதியை குழைத்தல் , மற்றவரின் உரிமைகளை மறுத்தல் , பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு சேதங்களை ஏற்படுதல் தாம் சார்ந்து நிற்கும் தலைவர்களையும் சில வாக்காளர்களை திருப்பி படுத்த ஷிர்க்கிலும் , பாவங்களிலும் ஈடுபடல் போன்றவற்றை முஸ்லிம் சமூகம் மிகவும் தீவிரமாக வெறுப்புடன் நோக்குகின்றது , எதிர்க்கின்றது என்பதுடன் இந்த குறைகள் அற்ற அரசியல் வழிகாட்டல்களை தேடிவருகின்றது.
எமது இன்றைய இலங்கை முஸ்லிம் சமூகம் குறிப்பாக இளைஞர் சமூகம் இஸ்லாத்தை தெளிவாக விளங்கிகொண்டுள்ளது அவர்கள் வன்முறைகளை , அமைதியை மற்றும் ஒற்றுமையை குழப்பும் நடவடிக்கைகளை இனவாதத்தை தூண்டும் நடவடிக்கைகளை முற்றாக வெறுக்கின்றனர் அதற்கு பதிலாக ஒன்றுமை, அமைதி , உரிமை ,சுதந்திரம் இன நல்லிணக்கம் , பெரிய சக்திகளுடன் கலந்து கரைந்து போகாமை போன்ற உயர்ந்த இஸ்லாமிய தத்துவங்களை விரும்புகின்றனர் இவற்றை தற்போது உள்ள அரசியல் கட்சிகள் உள்வாங்க தவறினால் அவை காலத்தினால் விரைவாக ஒதுக்கப்படும் அதற்கு பதிலாக தமது எதிர்பார்ப்புகளை பூர்த்தியாக்கக் கூடிய புதிய சக்திகளை முஸ்லிம் சமூகம் தெரிவு செய்துகொள்ளும் – முஸ்லிம் அரசியல் கட்சிகள் தம்நிலை உணர்ந்து எச்சரிக்கையாக செயல்பட தவறினால் ஒதுக்கப்படுவது தவிரக் முடியாது ஆகிவிடும். (Lankamuslim (Plus*))

No comments:

Post a Comment