Pages

Monday 18 February 2013

ஹலாலை வாபஸ் பெற ஒரு மாத காலக்கெடு

ஹலால் சான்றிதழை முற்றாக வாபஸ் பெற்றுக்கொள்வதற்கு எதிர்வரும் மார்ச்  31 வரை கால அவகாசம் வழங்கப்படுவதாகவும் எதிர்வரும் சிங்கள புதுவருடத்தை ஹலாலற்ற பாற்சோறுடன் அனைவரும் கொண்டாட வேண்டுமெனவும் பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞான சார தேரர் தெரிவித்தார்.

மஹரகமயில் இன்று நடைபெற்ற அவ்வமைப்பின் பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இது ஒரு பெளத்த நாடு இங்கு ஏனைய சிறுபான்மை மதத்தவர்கள் அதனை உணர்ந்து நடந்துகொள்ள வேண்டும். இன்று நாட்டில் ஹலால் என்ற ஒரு பிரிவினை வாதம் ஏற்பட்டுள்ளது. அது மிகவும் பயங்கரமானது. இது இஸ்லாமிய அடிப்படை வாதத்தை நாட்டில் வளர்க்கிறது. அதனை இலங்கையில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா செயற்படுத்தி வருகிறது. அதற்குறிய நிதி சவூதி அராபியாவூடாக அவர்களுக்கு  வழங்கப்படுகிறது.

இவ்வாறான நடவடிக்கைகளுக்கு சில அரசியல் வாதிகளும் துணை போகின்றனர். அவர்கள் சிங்கள பெளத்த உரிமையை குப்பைக்குள் போட முயற்சிக்கின்றனர் .

அதனால் நாம்  பத்து பிரகடனங்களை இன்றைய தினம் பிரகடனம் செய்கிறோம் என்கூறி பிரகடனங்களை வாசித்தார்.

குறித்த பிரகடனத்தில் ஹலால் சான்றிதழ் உடனடியாக தடை செய்யப்படல் வேண்டும், மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து கிடைக்கப்பெரும் நிதி மூலம் பள்ளிவால்களை நிர்மாணிப்பதை தடை செய்தல், சுற்றுலா வீசாவில் நாட்டுக்குள் பிரவேசித்து மத போதனைகளில் ஈடுபடுவோரை மார்ச் 17 ஆம் திகதிக்கு முன்னர் வெளியேற்றுதல், மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களை அனுப்புவதை தடை செய்தல், சிங்கள சனத்தொகை அதிகரிப்பில் உள்ள தடங்கள்களை நீக்குதல் போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. (Vidivelli)

Home

No comments:

Post a Comment