Pages

Monday 30 July 2012

மீண்டும் பெளத்த பிக்குகள் இடையூறு முஸ்லிம் தரப்பில் எந்த நடவடிக்கையும் இல்லை

1/
கொழும்பு செய்தியாளர்: ராஜகிரிய கிரீடா மாவத்தையில் அமைந்துள்ள மஸ்ஜிதுக்கு சென்ற பௌத்த பிக்குகள் அங்கு முஸ்லிம்களின் வணக்க வழிபாட்டுக்கு இடையூறை ஏற்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது . ஆனாலும் இது தொடர்பாக பொலீசில் முறைப்பாடு செய்யப்படவில்லை. இன்று-29.07.2012 நேற்று- ராஜகிரிய கிரீடா மாவத்தையில் அமைந்துள்ள நூர் மஸ்ஜித்தில் இfப்தார் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யபடிருந்தால் அதிகமான முஸ்லிம்கள் கூடியுள்ளனர்.

 அதன் காரணமாக மஸ்ஜித்தில் வெளி மின்விளக்குகளும் போடப்பட்டுகாணப்பட்டுள்ளது. இதனை அவதானித்த பெளத்த பிக்குகள் தலைமயிலான குழுவினர் மஸ்ஜிதின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அதேவேளை குறித்த மஸ்ஜித்தின் இfப்தார் நிகழ்வு பிரதேசத்தின் சிங்கள அரசியல்வாதி ஒருவரினால் ஏற்பாடு செய்யபட்டிருந்தது என்பது குறிப்பிடதக்கது .

இதை தொடர்ந்து பெளத்த பிக்குகளுடன் பேசிய மஸ்ஜித்தில் இருந்தவர்கள்  அவர்களுக்கு, மஸ்ஜித்தின் நிகழ்வு தொடர்பாக விளக்க வேண்டி ஏற்பட்டது , முஸ்லிம்கள் தரப்பில் , இது ரமழான் மாதம் என்றும் இடம்பெறுவது விசேட இப்தார் நிகழ்வு என்று அதை ஏற்பாடு செய்தவர் ராஜகிரிய பிரதேச சிங்கள அரசியல்வாதி என்றும் விளக்கியுள்ளனர். ஆரம்பத்தில் இடையூறை ஏற்படுத்தும் முகமாக நடந்துகொண்ட அவர்கள் முஸ்லிம் தரப்பில் தெரிவிக்கப் பட்ட விளக்கத்துக்கு பின்னர் திரும்பி சென்றுள்ளனர்.

இது தொடர்பாக குறித்த சிங்கள அரசியல்வாதிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் ஆனால் குறித்த சம்பவம் தொடர்பில் போலீசில் முறைப்பாடு செய்யப் படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது .

இந்த மஸ்ஜித்தில் வழமையாக தொழுகையில் ஈடுபடும்  நிறுவனம் ஒன்றில் உதவி முகாமையாளர் (மொஹம்மத் ஜெமீல்)   தனது கவலையை இப்படித் தெரிவித்தார். சம்பவம் தொடர்பாக அவர் தெரிவித்த தகவலில், குறித்த சம்பவம் தொடர்பாக பொலீசிலும் , மனித உரிமைகள் அமைப்பிடமும் முறைப்பாடு,செய்யப் படவேண்டும் ஆனால் அவ்வாறு   முறைபாடுகள் செய்வதற்கான எந்த ஏற்பாடுகளும் இடம்பெற்றதாக எனக்கு தெரியவில்லை. இங்கு முஸ்லிம்கள் வந்த பெளத்த பிக்குகளை பேசி அனுப்பிவிட்டது பெரிய வெற்றி என்று நினைகின்றனர் அது முற்றிலும் தவறானதாகும் .

எமக்கு நாட்டில் பள்ளிகளை கட்டுவதற்கும் அதில் பகிரங்கமாக வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதற்குமான உரிமை நாட்டின் யாப்பில் உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. அதை யாரும் தடுக்க முடியாது ,அந்த உரிமைகளை வன்முறையின் மூலம் பறிக்க முற்படும் சக்திகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முஸ்லிம் தரப்பில் எடுக்க தவறுவதன் விளைவைத்தான் தினமும் நாட்டின் பல பகுதிகளில் நாம் அனுபவித்து வருகிறோம் என்றார்.

அதுதான் சில தினங்களுக்கு  முன்னர் குருணாகல் தெதுரு ஓயகம பள்ளிவாசலிலும் இடம்பெற்றுள்ளது. அரசாங்கத்தாலும் இந்த சமூக வன்முறைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப் படுவதில் ,எமது முஸ்லிம் சமூகமும் எந்த சட்ட நடவடிக்கைகளையும் நாடுவதும் இல்லை. இது மிகவும் மோசமான நிலை . இப்படியான அத்துமீறல்கள் தொடர்வத்துக்கு இதுதான் பிரதான காரணம் என்று விசனம் தெரிவித்தார்.




Home             Sri

No comments:

Post a Comment