Pages

Thursday 26 July 2012

மன்னாரில் நடந்தது என்ன? கூறுகின்றார் அமைச்சர் ரிஷாத் பதியுதீன்

1/

Hon.Rishad Bathiudeen from Young Asia Television on Vimeo.



2/
“நீதிமன்றத்திற்கு முன்னால் சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். ஆனால் மன்னார் உப்புக்குளம் மக்கள் நீதிமன்றத்திற்கு முன்னால் செய்யவில்லை. அவர்கள் 200 மீட்டர் தூரத்திற்கு அப்பால் செய்கிறார்கள். எனவே நீதிமன்றத்திற்கு முன்னால் நீதிவான்களுக்கு, சட்டத்தரனிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய முடியுமாக இருந்தால், கொழும்பிலே லிப்டன் சதுக்கத்திலே ஆர்ப்பாட்டம் செய்ய முடியுமாக இருந்தால், ஜனாதிபதிக்கெதிராக, அரசாங்கத்திற்கெதிராக, அமைச்சர்களுக்கெதிராக ஒவ்வொரு கட்டத்திலும் நாட்டிலே பல நடைபெறுகின்றது. அவ்வாறு இந்த நாட்டிலே ஜனநாயக ரீதியான போராட்டங்கள் நடந்து வருகின்றது. ஆகவே 11 வருடங்களாக உரிமை கேட்டு தீர்வு அற்ற நிலையில் இவ்வாறான ஒரு அஹிம்சைவழிப் போராட்டத்தை உப்புக்குளம் மக்கள் நடத்தினர். எனவே அந்த மக்கள் ஜனநாயக முறையில் செய்த போராட்டத்தை அதிகாரபலத்தையும் வன்முறையையும் பிரயோகித்து தடுத்த காரணத்தினால்தான் அவ்வாறானதொரு கலவரம் ஏற்பட்டு இந்த நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. 

நீதிமன்றத்தின் மீது யார் தாக்குதல் மேற்கொண்டாலும் அது குற்றமாகும். அதற்காக தங்களுடைய அகிம்சைரீதியான போராட்டத்தை, பள்ளிவாசல், அங்கிருக்கின்ற பெண்கள், சிறுவர்கள், இந்த பிரதேசத்தில் தங்களுடைய ஜீவனோபாயமாக மீன்பிடியைக் கொண்டுள்ள மீனவக் குடும்பங்கள் ஒன்றிணைந்து விடுதலைப்புலிகளால் மறுக்கப்பட்ட உரிமைக்கு நியாயம் கேட்டபோது குறிப்பாக ஜனநாயக ஆட்சி நடைபெறுகின்ற, சமாதானம் மலர்ந்திருக்கின்ற பிறகும் தங்களுக்கு இவ்வாறானதொரு அநியாயம் நடப்பதை சொல்லுவதற்கு ஒரு போராட்டத்தை மேற்கொண்டதற்காக அனைவரையும் கைதுசெய்ய வேண்டும், அங்குள்ள முக்கியஸ்தர்களையெல்லாம் கைதுசெய்ய வேண்டும் என்று பொலிஸார் நடவடிக்கை எடுப்பார்களாக இருந்தால் அதற்கு யாராவது உத்தரவிடுவார்களாக இருந்தால் அது அந்த மக்கள் மத்தியிலே ஜனநாயகத்தின் மீதுள்ள நம்பிக்கையை இழக்கச் செய்துவிடும்.”
முழுமையான விபரங்களுக்கு முழுமையாக கானொளி நேர்காணல் தரப்பட்டுள்ளது.

3/


Home

No comments:

Post a Comment