Pages

Wednesday 25 July 2012

பொலிஸ் பாதுகாப்புடன் குருநாகல் பள்ளிவாசல் மீண்டும் திறப்பு

1/
 குருணாகல், தெதுறு ஒயகம அல் அக்ரம் பள்ளிவாசல் முன்பாக இந்த பிரதேசத்திற்கு அன்மையிலுள்ள பௌத்த விகாரையை சேர்ந்த பிக்கு ஒருவர் பலவந்தமாக சுமார் 150 பேருடன் வந்து முஸ்லிம்களின் மனம் நோகும் வகையில் பௌத்த மத அனுஷ்டானத்தில் ஈடுபட்டார்... இது சம்பந்தமாக வெல்லவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி IP லன்சக்கார உடனடியாக நடவடிக்கையெடுத்ததன் காரணமாக பிக்கு உட்பட ஏனையவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். ஸ்தலத்திற்கு விறைந்த குருணாகல் மாநகர உறுப்பினரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளருமானஅப்துல் சத்தார் அவர்கள் குருணாகல் பொலிஸ் அத்தியஸ்டகர் மஹிந்த திஸாநாயக்க அவர்களுக்கு "முஸ்லிம்களுக்கு ஐவேலை தொழுகை கடமையென்றும் இவைகளை கூட்டாக தொழுவதற்குறிய பள்ளிவாசல்களை அமைத்ததுக்கொள்வது இந்த நாட்டின் முஸ்லிம்களுக்குரித்தான அடிப்படை உரிமை யென்றும் விசேடமாக இந்தப்பள்ளிவாசல் முஸ்லிம் சமய கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டதென்றும்"விளக்கியதோடு அரசாங்கத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் சூழ்ச்சியான முறையில் இப்படியான செயல்கள் சம்பந்தமாக பொலிஸார் உஷார் நிலையில் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துறைத்தார். இந்த இடத்திற்கு வடமேல் மாகாண சபை உறுப்பினர் றிஸ்வி ஜவஹர்ஷா அவர்களும் விஜயம் செய்தார்

2/
குருணாகல்,வெல்லவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தெதுறு ஒயகம அல் அக்ரம் மஸ்ஜித் முன்பாக நேற்று மஃரிப் தொழுகைக்குப் பின்னர் புனித ரமழான் மாதத்தில் முஸ்லிம்களுக்கு இடையூறு ஏற்படுத்தி முஸ்லிம்களின் மத்தியில் அச்சத்தையும் அனாவசியமான பிரச்சணையையும் ஏற்படுத்திய பிக்குவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து நீதி மன்றத்தில் ஆஜர் செய்யுமாறு குருணாகல் மாநகர உறுப்பினரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளருமான அப்துல் சத்தார் அவர்கள் குருணாகல் பொலிஸ் அத்தியஸ்டகர் மஹிந்த திஸாநாயக்க அவர்களை சந்தித்து வேண்டுகோல் விடுத்தார்.

சமாதானத்தை குழைக்கும் நோக்குடன் அரசாங்கத்தின் பௌத்த அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கும் முஸ்லிம் சமய கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட சட்ட பூர்வமான அல் அக்ரம் மஸ்ஜிதுக்கு இடையூறு ஏற்படுத்திய சம்பவம் சம்பந்தமாக நடவடிக்கை எடுத்து சம்பத்தப்பட்டவரகள் எவராக இருந்தாலும் அவர்களை நீதி மன்றத்தில் ஆஜர் செய்வதாகவும் இப்படியாக சமூகங்களுக்கிடையில் குழப்பங்களை ஏற்படுத்துபவரகளுக்கு இது பாடமாக அமைய வேண்டும்
எனறும் கூறினார்


3/
குருநாகல் பள்ளிவாசல் மீண்டும் திறப்பு - பொலிஸ் பாதுகாப்புடன் தொழுகை

குருணாகல் வெல்லவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தம்பகம ௭ன்ற இடத்தில் அமைந்துள்ள அல்– அக்ரம் பள்ளிவாசல் மீண்டும் திறக்கப்பட்டு, அங்கு தொழுகைகள் நடைபெற்றுவருவதாக முஸ்லிம் கவுன்சில் தலைவர் யாழ் முஸ்லிம் இணையத்திற்கு கூறினார்.

குறித்த பகுதியில் நேற்று பதற்ற நிலை காணப்பட்ட போதிலும் தற்போது அங்கு அமைதியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இருந்தபோதும் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிவாசலுக்கும் அருகாமையில் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று செவ்வாய்கிழமை பள்ளிவாசல் மூடப்பட்ட சம்பவம் தொடர்பில் அறியக்கிடைத்ததும் உடனடியாக
அகில இலங்கை முஸ்லிம் மதகுருக்கள் சபை, முஸ்லிம் கவுன்சில் மற்றும் முஸ்லிம் அரசியல் வாதிகள் இதுதொடர்பில் ஆர்வம் செலுத்தி பாதுகாப்பு உயர் தரப்பினருடன் பேசினர். பொலிஸ்மாத அதிபரின் கவனத்திற்கு கொண்டு சென்றோம்.

அவர் இவ்விடயத்தின் உடனடியாக தலையிட்டார். இதனால் மூடப்பட்ட பள்ளிவாசல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. தற்போது வழமைபோன்று அங்கு தொழுகைகள் நடைபெற்று வருகின்றன.

அண்மையில்
அகில இலங்கை  முஸ்லிம் மதகுருக்கள் சபையும், முஸ்லிம் கவுன்சிலும் இணைந்து பாதுகாப்பு அமைச்சு செயலாளர் கோட்டபய ராஜபக்ஸவை சந்தித்தோம். இதன்போது அவர் முஸ்லிம்களுக்கு பிரச்சினைகள் ஏடீற்படும் போது உடனடியாக தமது கவனத்திற்கு கொண்டுவருமாறு கூறினார். அதன்படி நாம் செயற்பட்டதால் குருநாகல் பள்ளிவாசல் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு காணப்பட்டுள்ளது.

எதிர்வரும் காலவங்களில் முஸ்லிம் பிரதேசங்களில் இவ்வாறு சிக்கல்கள் ஏற்படும்போது பிரதேச முஸ்லிம்கள் நிதானத்தை கைவிடாது, உடனடியாக சம்பந்தப்பட்ட தரப்பினரை தொடர்புகொண்டு, அதன்மூலம் பாதுகாப்பு உயர் தரப்பினரை தொடர்புகொள்வோமாயின் பிரச்சினைகளுக்கு இலகுவில் திர்வு பெற்றுக்கொள்ள முடியுமெனவும்
பொலிஸார் மேலும் தெரிவித்தர்.

Home          Sri Lanka Think Tank-UK (Main Link)

No comments:

Post a Comment