Pages

Sunday 15 January 2012

நாம் எதிர்பார்க்​கும் அரசும் சமூக ஒழுங்கும் குறித்து..​.......

அல்குர்ஆன் முழு மனித சமூகத்திற்குமான ஒரு நூல் என்பதுவும் முகம்மத் நபி அவர்கள் முழு உலகத்திற்கும் ஒரு அருட்கொடை முஸ்லிம்களின் அடிப்படை நம்பிக்கை. எனினும் உலகத்தில் அனைவரும் முஸ்லிமாக இல்லை. மறுபுறத்தில் மார்க்கத்தில் எந்த நிர்ப்பந்தமும் இல்லை. அல்லாஹ்வின் ஏற்பாடும் இதுவே.

இவை அனைத்தையும் வைத்து நோக்கின்ற போது இஸ்லாம் இந்த உலகத்திற்கு நிரந்தரமான மாறாத்தன்மை பெற்ற கொள்கைகளையும் விழுமியங்களையுமா அவ்வப்போது சமூக நிலைமைகளைக் கருத்திற்ககொண்டு கொள்கைகளுக்கும் விழுமியங்களுக்கும் இணங்க சட்டங்களையும் முன்வைத்துள்ளன.

இன்று நடைமுறையில் சட்டங்கள் பாராளுமன்றத்தால் இயற்றப்படுகின்றன. அவ்வப்போது சமூகத்தின் தேவைக்கு ஏற்ப சட்டங்கள் திருத்தப்படுகின்றன. எதிர்காலத்திலும் திருத்தப்படும். அந்தவிதத்தில் சட்டங்கள் வரலாறு நெடுகிலும் மாற்றத்திற்கு உட்படுபவை. சமூக நிலைமைகளுக்கு ஏற்ப மாற்றமடையக் கூடியவை. மாறாக விழுமியங்களும் கொள்கைகளும் நிரந்தரமானவையாக இருக்கலாம்.

அந்த வகையில் அல்குர்ஆன் முன்வைக்கும் கொள்கைகளும் விழுமியங்களும் நிரந்தரமானவை. காலமாற்றம் அதன் கொள்கைகளிலும் விழுமியங்களிலும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துப் போவதில்லை.

அத்துடன் இஸ்லாமியக் கொள்கைகளும் விழுமியங்களும் சர்வதேச விழுமியங்கள் என்றவகையில் முழு உலகத்தவர்களுக்கும் பொருந்தக் கூடியவை.

எனவே முஸ்லிமல்லாத அரசுகளும் இஸ்லாமிய கொள்கைகளையும் விழுமியங்களையும் அடிப்படையாக்க கொண்டு சட்டமியற்றினால் அவை இஸ்லாமிய சட்டமே. அந்தவகையில் முஸ்லிம்கள் பொரும்பான்மையல்லாத பாராளுமன்றங்களிலும் இஸ்லாமிய விழுமியங்களையும் கொள்கைகளையும் அடிப்படையாக்க கொண்டு சட்டமியற்றலை ஊக்குவிப்பதன் மூலமும் பங்களிப்பு செய்வதன் மூலமும் இஸ்லாமிய சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தலாம்.

அந்த வகையில் இலங்கையில் இஸ்லாமிய விழுமியங்களையும் கொள்கைகளையும் அடிப்படையாக வைத்து இலங்கைப் பாராளுமன்ற சட்டங்களிலும் ஏனைய விவகாரங்களிலும் நாம் திருத்தங்களை முன்மொழியலாம். நமது விழுமியங்களும் கொள்கைளும் சர்வதேச விழுமியங்களாக இருப்பதனால் அதனடடியாக நாம் முன்வைக்கும் சட்டவாக்கத் திருத்தங்களும் சமூக நலத்திட்டங்களும் அனைவராலும் நிச்சயம் ஏற்றுக்கொள்ளப்படும். அதன்மூலம் இஸ்லாமிய சட்டம் என்ற பெயரைத்தாங்காத போதும் எமது நாட்டு சட்டங்களை இஸ்லாமிய சட்டங்களாகவும் அனைவராலும் ஏற்றுக்ககொள்ளப் பட்ட சட்டமாகவும் மாற்றலாம்.

கிலாபா, ஷரிஆ என்ற விளப்பரப் பலகைகளுக்கு அப்பால் இஸ்லாமிய விழுமியங்களையும் கொள்கைகளையும் அடிப்படையாகக் கொண்டு இந்த நாட்டில் இஸ்லாமிய இயக்கங்கள் இந்த நாட்டு மக்களுக்கு நலன் சேர்க்கும் விதத்தில் சட்டவாக்கத்திலும் ஏனைய அனைத்து சமூக செயற்திட்டங்களிலும் பங்களிப்பு செய்யத்தயாரா?

இது குறித்து உங்கள் கருத்து என்ன? (Ummu Hana, via SL Muslim Forum, 29/12/11)


Home

No comments:

Post a Comment