Pages

Sunday 5 December 2010

இலங்கை முஸ்லிம்களின் தலைமையின்மை

இலங்கையில் புலிகளின் வீழ்ச்சிக்குப் பிறகு இலங்கை முஸ்லிம்கள் எம்மாதி ரியான அரசியல் வழியைப் பின்பற்று வது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறார்கள்.


புலிகள் இராணுவ வலிமையுடன் உச்சகட்டத்தில் இருந்த போதுஇலங்கை முஸ்லிம் சமூகத்தின் முன் இரண்டு முக்கிய கேள்விகள் எழுந்தன. ஒன்றுஒருகால் புலிகளின் கோரிக்கை ஏற்கப்பட்டு இலங்கை இரண்டாகப் பிரிய நேரிட்டுஅதில் மூன்றில் ஒரு பகுதி தமிழ் ஈழமாகவும்மிகுதி மூன்றில் இரு பகுதி சிங்கள சிறிலங்காவாகவும் பிரிக் கப்பட்டு அதில் தமிழ் ஈழப் பகுதிக் குள் முஸ்லிம்களும் சேர்க்கப்படுவார்களானால் அப்போது முஸ்லிம்களின் எதிர்காலம் என்னவாகும்அல்லது புலிகள் முற்றாக அழிக்கப்பட்டால் அப் போது இலங்கையில் முஸ்லிம்களின் எதிர்கால அரசியல் சாத்தியக் கூறு கள் எப்படியிருக்கும்?
1983ல் ஈழப் போர் துவங்கிய நாளிலிருந்து 2009ல் புலிகள் முற்றாக அழிக் கப்பட்ட இடைக்காலத்தில் முஸ்லிம்களிடையே இது பற்றிய வெளிப்படை யான விவாதங்களோ சிந்தனையோ இருக்கவில்லை. முஸ்லிம் தலைவர் களிடமும் எவ்வித தூர நோக்குப் பார்வையும் இருக்கவில்லை. தவிரமுஸ் லிம்களைப் பாதிக்கக் கூடிய தேசியப் பிரச்சினைகள் எது பற்றியும் எந்த முடிவும் எடுக்க தயக்கம் காட்டும் பழமைவாத நிலைப்பாடு ஆகியவை முஸ்லிம் சமுதாயத்தைப் பிற்காலத்தில் எந்தளவு பாதிக்கும் என்பதைக்கூட அவர்கள் உணரவில்லை. அது அவர்களின் எதிர்கால வாழ்க்கைப் பிரச்சினை என்பதையும் அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.
சுதந்திர இலங்கையில் முஸ்லிம் தலைமைத்துவம் எப்போதும் தனி மனிதர்க ளையே சார்ந் திருந்தது. கொள்கைகள்திட்டங்கள் அடிப்படையில் அமைய வில்லை. சில அரசியல் அமைப்பு கள் உருவானாலும் உதாரணமாகAll Ceylon Moors Association சேர்.ராஸிக் பரீத் தலைமையிலும்சிலோன் முஸ்லிம் லீக் எம்.ஸீ.எம். கலீல் தலைமையிலும்இஸ்லாமிக் சோஷலிஸ்ட் முன்னணி பதி யுத்தீன் மஹ்மூத் தலைமையிலும்,மார்க்ஸிஸ்ட் எதிர் முன்னணி எம்.எச். முஹம்மத் தலைமையிலும்சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.எச்.எம்அஷ்ரப் தலைமையிலும் அமைந்தன.
ஆனால்அவர்கள் தங்களை முன்னிலைப்படுத்துவதிலும் தேர்தல்களில் தாங் களும் தம்மைப் பின்பற்றுவோரும் வெற்றி பெறவும்தான் எண்ணினார்களே தவிரதங்கள் சமுதாயம் நீண்ட காலம் பயனடையக் கூடிய திட்டங்களை மேற்கொள்ளவில்லை. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அதனை ஆதரித்து தங்கள் சமூகத்திற்குத் தேவையானவைகளை நிறைவேற்றிக் கொண்டால் போதும் என்று எண்ணினர்.
அதனால்தான் முக்கியமான காலத்தின் கட்டாயப் பிரச்சினைகளான இலங்கை குடியுரிமைஆட்சி மொழி,சோஷலிச சீர்திருத்தம்அரசியல் சட்டத் திருத்தங்கள்இன தேசியவாதம் போன்றவை விவாதத்திற்கு எடுத்துக் கொள் ளப்பட்டபோது ஒரு சிலரைத் தவிர முஸ்லிம் பார்லிமெண்ட் உறுப்பினர்கள் தேசிய பார்வையுடன் கூடிய ஆழமான கருத்துகளை சபைமுன் வைக்க வில்லை.
இந்தக் குறைபாட்டிற்கு இரண்டு காரணங்களைக் கூறலாம்ஒன்றுஅரசியல் சந்தர்ப்பவாதம். இரண்டுசமய அடிப்படையிலான பழைய நம்பிக்கைகள். இலங்கையின் பல்லின சமுதாயத்தில் மூன்றாவது பெரிய இனவழி சமயப் பிரிவாக இருந்துகொண்டு தங்கள் சமுதாயத்திற்குத் தேவை யானவற்றை கேட்டுப் பெறுவதைவிட்டு,அரசியல் சந்தர்ப்பவாதத்தை மேற்கொண்டு வெற்றி பெற்ற பெரும்பான்மை கட்சியின் ஆட்சியை ஆதரித்ததன் மூலம் தேசிய ஒற்றுமைக்கோ பொருளாதார வளத்திற்கோ உதவவில்லை.
இந்தக் கொள்கையை 1950 லிருந்து முஸ்லிம் அரசியல்வாதிகள் பின்பற் றினர். ஒருவர் கூறினார்: சிங்களவர்களும்தமிழர்களும் பிரிந்து நின்றால் சந் தர்ப்பத்திற்கேற்ப முஸ்லிம்கள் அதில் நீச்சலடிக்க முடியும். அவர்கள் இணைந்தால் முஸ்லிம்கள் மூழ்கிப் போய்விட நேரிடும்.
சுயநலமிக்க வர்த்தக ரீதியான மனப்பான்மையினால் தேசிய அரசியலில் அவர்களின் அணுகு முறை சரியானதாக இல்லை. முஸ்லிம் அரசியல்வாதி களின் மாறுபாடான மனப்பான்மையினால் தேசபக்தியற்றவர்களாகக் காணப் பட்டனர். முக்கியமாககுடியுரிரமைஆட்சி மொழிஅரசியல் சட்டத்திருத்தம்,உயர் கல்வி மற்றும் இஸ்லாம் போன்ற முக்கிய பிரச்சினைகளைப் பற்றி அவர்கள் கவலைப்படவே இல்லை.
இஸ்லாமியப் பழமைவாதம் முக்கியமாக அடிப்படைவாதம் இம்மையை விட மறுமையைப் பற்றி அதிகம் முக்கியத்துவம் கொடுக்கிறது. இம்மையில் செய் யக் கூடிய செயல்கள் மறுமைக்கு உதவுவதாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தனர். இந்த நம்பிக்கை தேசிய அரசியல் மட் டத்தில் முஸ்லிம்கள்இலங்கை ஒரு முஸ்லிம் நாடு அல்ல என்பதால் அவர்களுக்கு நாட்டை யார் ஆண்டால் என்ன என்ற மனப்பான்மையும் முஸ்லிம்களின் உரிமைகள் பாது காக்கப்பட்டால் போதும் என்ற எண்ணமும் மேலோங்கி நின்றது.
இப்படி மாறுபட்ட கருத்துக் களைக் கொண்டவர்களிடையேயும் இனவாத அடிப்படையில் குறுகிய எண்ணங்களைக் கொண்டவர்களிடையேயும் தங்கள் தலைமையை முஸ்லிம் தலைவர்கள் நிலைநிறுத்தினார்கள்.
1940லிருந்து இலங்கை முஸ்லிம் அரசியல் மூன்று தலைவர்களின் பின் இருந்தது.
1.             சேர். ராஸிக் பரீத் (1904-1997)
2.             டாக்டர் பதியுத்தீன் மஹ்மூத் (1904-1997)
3.             எம்.எச்.எம். அஷ்ரப் (1948-2000)
சேர். ராஸிக் பரீதின் அரசியல் சில நேரங்களில் அரசியல் வியூகம் என்று பார்க்கப்பட்டது. அவர் எப்போதுமே வெற்றி பெற்ற கட்சியுடனே இருப்பார். அரசியல் பங்கு வகிப்பார். அதன் மூலம்தன் முஸ்லிம் சமுதாயத்திற்கு சேவை செய்தார். கட்சிக் கொள்கை நடைமுறை இவைகளைப் பற்றி அவர் கவலைப் படுவதில்லை. தன் சமுதாயத்திற்கு என்ன வேண்டுமோ அதைப் பெற்றுக்கொடுத்தார்.
டாக்டர் பதியுத்தீனோஓர் அரசியல் கட்சியின் கொள்கைகளுக்குக் கட்டுப்பட்டு அதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு அக்கட்சியிலிருந்தவாறே தனது சமுதாயத்திற்குத் தேவையானவைகளைப் பெற்றுத் தந்தார்.
அதன் அடிப்படையில்அவர் இலங்கை சுதந்திரக் கட்சியைத் துவங்கிய உறுப்பினர்களில் ஒரு வராகத் திகழ்ந்தார். அவர் இறக்கும்வரை அதே கட்சி யிலேயே தொடர்ந்து அங்கம் வகித்தார். அவர் பாராளுமன்றத்திற்குத் தேர்ந் தெடுக்கப்படாமலே உறுப்பினரானார். தொடர்ந்து கல்வி அமைச்சரும் ஆனார். அவர் காலத்தில் அவருடைய கல்வி அமைச்சு முஸ்லிம்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தரும் அமைப்பாக மாறியது என்று கூறினால் மிகையாகாது.
அஷ்ரபின் அரசியல் திட்டம்இலங்கை முஸ்லிம்களுக்கென்றே தனியாக ஒரு அரசியல் கட்சியை தோற்றுவித்துஅதிக அளவில் பார்லிமெண்டில் இடங் களைக் கைப்பற்றுவது. அதனைக் கொண்டு முஸ்லிம்களின் பிரச்சினைக ளுக்கும் தேவைகளுக்கும் ஆட்சியாளர்களிடம் பேரம் பேசி பெற்றுத் தருவது.
மூன்று தலைவர்களின் காலத்தில் முஸ்லிம்கள் கல்விபொதுத் துறை வேலை வாய்ப்புசமய கலாசார நலன் ஆகியவைகளில் பெரும் வளர்ச்சி யைக் கண்டாலும் இரண்டு பெரும் இனங்களிடையே -சிங்களவர்கள்தமிழர் கள்- ஏற்பட்ட பிளவுதான் இவர்களுக்கு இந்த வாய்ப்பைக் கிடைக்கச் செய்தது. மூன்று தலைவர்களிடமும் தங்கள் சமூகத்தின் எதிர்காலத்திற்கான திட்டமோ தேசியப் பார்வையோ இல்லாததால் மற்ற இனங்களிடமிருந்து போதுமான ஆதரவு முஸ்லிம்களுக்குக் கிடைக்கவில்லை.
சிங்கள இனத்திற்கும் தமிழர் களுக்கும் இடையே பகையுணர்வு அதிகரித்து வந்தது. முஸ்லிம்கள் தங்கள் சனத்தொகைமொழிநாடுசமயம் இவற்றைக் கொண்டு தங்கள் தலைவர்களைப் பலப் படுத்திபோரிடும் இரு இனங் களுக்கிடையே நல்லுறவு ஏற்பட ஒரு பாலமாக இருந்திருக்க முடியும். மக் கள் தொகைக் கணக்குப்படி முஸ்லிம்கள் எல்லா மாகாணங்களிலும் பரந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் இனவாரியாக நாட்டைப் பிரித்தால் அதி கம் பாதிக்கப் போவது முஸ்லிம் கள்தான்.
மொழிவாரியாகப் பார்த்தால் முஸ்லிம்கள் அனைவரும் பேசுவது தமிழ்தான். மற்ற இனத்தைப் போல் அல்லாமல் முஸ்லிம்கள் சிங்கள மொழியில் பேசவும் எழு தவும் திறன் பெற்றிருந்தார்கள்.
திருக்குர்ஆனில் இறைவன்மனித குலம் ஒரு ஆண் ஒரு பெண்ணிலிருந்து உருவாகியது என்றும் அந்த இருவரிடமிருந்து தான் உலகில் பல இன மக்கள் உருவாகினர் என்றும் கூறுகிறான். அதனால் மற்றவர்களை வெறுக் கக் கூடாது என்பது அடிப்படை. முஸ்லிம் தலைவர்கள் திருக்குர் ஆன் வழியில் தேசிய ஒருமைப் பாட்டிற்கும் சமூக நல்லிணக்கத்திற்கும் சேவை செய்திருக் கலாம். இம்மாதிரியான செயல்களைத் துரதிர்ஷ்டவசமாக முஸ்லிம் தலை வர்கள் எண்ணிப் பார்க்கவில்லை. நாட்டின் ஒருமைப் பாட்டிற்கே முஸ்லிம் கள்தான் காரணம் என்ற நல்ல பெயரைப் பெறத் தவறிவிட்டனர். நீண்ட காலத்திற்கான அரசியல் பார்வையும் தேசத்தின் மீது தங்கள் விசு வாசமும் அங்கு காணப்பட வில்லை.
அரசியல் தலைவர்களுக்கு ஆலோசனை கூறி வழிகாட்ட அறிஞர்களைக் கொண்ட குழுவை இலங்கை வரலாற்றிலேயே முஸ்லிம்கள் அமைத்துக் கொள்ள வில்லை. மாறாகமுஸ்லிம் தலைவர்கள் அறிஞர்களை ஓரம் கட்டியே தங்கள் அரசியலை நடத்தினர். செல்வந்தர்களும் அறிவுசார்ந்த பெருமக்களை உதாசீனப்படுத்தினர். அதனால் பல நுண்ணறிவாளர்கள் வெளி நாடுகளுக்குச் சென்று குடியேறி விட்டனர். நாட்டை விட்டுச் செல்லாத ஒரு சில அறிஞர்களும் சமுதாயத்தையும் நாட்டையும் பாதிக்கும் பிரச்சினைகளில் தங்கள் கருத்துக்களைச் சொல்வதில்லை.
1970க்குப் பிறகு துவங்கிய அரசியல் வன்முறை தலைதூக்க ஆரம்பித்ததும் அந்த அறிவுசால் பெருமக்கள் தங்கள் வாயையே திறப்பதில்லை. துரதிர்ஷ்ட மாக அஷ்ரப் மறைந்தவுடன் முஸ்லிம் அரசியல் உலகம் தலைமையின்றி வெற்றிடமாக மாறியது. இப்போது வரலாற்றில் இல்லாத அளவு மிக அதிக அளவில் முஸ்லிம் அரசியல் வாதிகளும் அமைச்சர்களும் இருக்கிறார்கள். அவர்கள் தலைமைப் போட்டியால் பல கட்சிகளாகப் பிரிந்து நிற்கிறார்கள். ஆனால்இவர்கள் யாருக்கும் தங்கள் சமுதாயத்தை தேசிய அளவில் கொண்டு செல்லும் அளவுக்கு அறிவும் ஆற்றலும் முன்னோக்குப் பார்வையும் இல்லை.
அவர்கள் தங்கள் சமுதாயத்தை இருள் சூழ்ந்த கண்ணுக்குத் தெரியாத பாதையில் அழைத்துச் செல்கிறார்கள். நிர்வாகத் திறன் கொண்ட ஒரு தலைமை உருவாவது இப்போதைய காலத்தின் கட்டாயம். இஸ்லாமிய ஷரீஅத் சட்டப்படி இது  தனிப்பட்ட ஒருவரின் சமயக் கடமை மட்டுமல்லஒட்டுமொத்த சமுதாயத்தின் மீதும் கட்டாயக் கடமையாகும் (Meelparvai Plus*)
Home                Sri Lanka Think Tank-UK (Main Link)  

No comments:

Post a Comment