Pages

Saturday 10 July 2010

India வரலாறு காணாத மிகப் பிரம்மாண்டப் பேரணி மாநாடு! மக்கள் வௌ்ளத்தில் மூழ்கிய சென்னை!



தீர்மானங்கள்;

ஜூலை 2010ம் ஆண்டு 4ம் தேதி சென்னை தீவுத்திடல் இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் எழுச்சியுடன் பங்கேற்ற, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய ஒடுக்கப்பட்டோரின் உரிமைப் பேரணி & மாநாட்டில்’ நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :

நீதிபதி மிஸ்ரா, சச்சார் ஆகியோருக்கு நன்றி

01. இந்திய நாட்டை உருவாக்குவதிலும், இந்தியாவின் அடிமைத் தளையை உடைத்தெறிவதிலும் பெரும் பங்கு ஆற்றிய முஸ்லிம்கள் நாடு விடுதலையடைந்து 60 ஆண்டுகள் கடந்த பின்பும் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இந்திய அரசு அமைத்த நீதிபதி ராஜேந்திர சச்சார் கமிஷனும், நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷனும் இதை அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்துள்ளன. முஸ்லிம்களுக்குப் பத்து விழுக்காடு தனி இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று மிஸ்ரா கமிஷன் தெளிவான பரிந்துரை யையும் வழங்கியுள்ளது. முஸ்லிம் சமுதாயத்தின் சார்பில் இதற்காக இம்மாநாடு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

கல்வியில் இட ஒதுக்கீடு

02. முஸ்லிம்களின் இந்த அவல நிலை மாறிட ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், ஐ.ஐ.எஸ்.சி. உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் அனைத்து மாநிலங்களில் உள்ள கல்லூரிகளிலும் முஸ்லிம்களுக்குப் பத்து விழுக்காடு தனி இட ஒதுக்கீட்டைச் சட்டமாக்க வேண்டும் என்று முஸ்ம் சமுதாயம் சார்பில் இம்மாநாடு மத்திய அரசை வயுறுத்துகிறது.

வேலை வய்ப்பில் இட ஒதுக்கீடு

03. அனைத்து மாநிலங்களிலும், அனைத்து மத்திய அரசுப் பணிகளிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும், தனியார்கள் நடத்தும் பெரிய நிறுவனங்களிலும், பன்னாட்டு நிறுவனங்களிலும் முஸ்லிம்களுக்குப் பத்து விழுக்காடு தனி இட ஒதுக்கீட்டைச் சட்டமாக்க இம்மாநாடு மத்திய அரசை வயுறுத்துகிறது.

பாதுகாப்புத்துறையில் இட ஒதுக்கீடு

04. நாட்டில் நடக்கும் வகுப்புக் கலவரங்களின்போது, காவல்துறை, உளவுத்துறை, மத்தியக் காவல் படை, துணை இராணுவம் மற்றும் இராணுவம் ஆகிய அனைத்து துறைகளும் பாரபட்சமாகவும், சிறுபான்மை மக்களுக்கு எதிராகவும் நடந்துள்ளனர். இதை மத்திய அரசு அமைத்த பல்வேறு கமிஷன்கள் ஆதாரத்துடன் சுட்டிக் காட்டியுள்ளன. எனவே மத்திய அரசின் இராணுவம், உளவு உள்ளிட்ட பாதுகாப்புத் துறைகளிலும் மாநில அரசுகளின் காவல் மற்றும் உளவுத்துறையிலும் 20 சதவிகிதம் முஸ்லிம்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று மத்திய அரசை இம்மாநாடு வற்புறுத்துகிறது.
அரசியல் அதிகாரத்தில் தனி இட ஒதுக்கீடு

05. மக்களவையிலும், மாநிலங்களவையிலும் மாநில சட்டமன்றங்களிலும் முஸ்ம்களின் பிரதிநிதித்துவம் படிப்படியாகக் குறைந்து வருகிறது. அனைத்துக் கட்சிகளும், பெரும்பான்மை சமுதாய வேட்பாளரையே நிறுத்துவதால் முஸ்லிம்கள் அரசியல் அதிகாரத்தில் பங்கு பெற இயலவில்லை. இந்த நிலை மாறிட தத் சமுதாய மக்களுக்கு ரிசர்வ் தொகுதிகள் இருப்பதுபோல் உள்ளாட்சி, சட்டமன்றம், நாடாளு மன்றம், மாநிலங்களவை, மாநில மேலவைகள் அனைத்திலும் பத்து விழுக்காடு தொகுதிகளை முஸ்லிம் ரிசர்வ் தொகுதிகளாக அறிவித்து சட்டமியற்ற மத்திய அரசை முஸ்லிம் சமுதாயத்தின் சார்பில் இம்மாநாடு வயுறுத்துகிறது.

நலத்திட்டங்களிலும் இட ஒதுக்கீடு

06. மத்திய, மாநில அரசுகளின் அனைத்து நலத்திட்டங்களிலும், இலவசத் திட்டங்களிலும் அதிகாரிகள் முஸ்லிம்களைப் புறக்கணித்து துரோகம் செய்து வருகின்றனர். எனவே நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா அவர்களின் பரிந்துரைக்கு ஏற்ப அனைத்து நலத்திட்டங்களிலும் முஸ்லிம்களுக்குப் பத்து விழுக்காடு தனியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று இம்மாநாடு மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறது.

முஸ்லிம் பல்கலைக் கழகம்

07. உத்தரப்பிரதேசத்தில் இருப்பதுபோல் அனைத்து மாநிலங்களிலும் முஸ்லிம் பல்கலைக் கழகம் அமைக்க வேண்டும் என்று நீதிபதி மிஸ்ரா அவர்களின் பரிந்துரையை ஏற்று ஆவண செய்ய வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

காங்கிரஸின் தார்மீகக் கடமை

08. 2004 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தன் போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு அளிப்போம் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறியது. அதை நம்பி முஸ்லிம்கள் வாக்களித்ததால் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தது. ரங்கநாத் மிஸ்ரா அறிக்கைக்காக மட்டுமின்றி காங்கிரஸ் அளித்த தேர்தல் வாக்குறுதிக்காகவும் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் தார்மீகப் பொறுப்பு கங்கிரசுக்கு உள்ளது என்பதையும் காங்கிரசுக்கு இம்மாநாடு சொல்லிக் கொள்கிறது.

சட்டத்தில் தடை இல்லை

09. முஸ்லிம்களுக்குத் தனி இட ஒதுக்கீடு அளிக்க சட்டத்தில் எந்தத் தடையும் இல்லை என்பதையும் அதற்கான வமுறைகள் எவை என்பதையும் இந்தியாவின் மாபெரும் சட்டவல்லுனர் ரங்கநாத் மிஸ்ரா தெளிவுபடக் கூறியுள்ளார். எனவே சட்ட ரீதியாக எந்தச் சிக்கலும் இல்லாமல் தனி இட ஒதுக்கீடு வழங்க முடியும் என்பதை காங்கிரசுக்கு இம்மாநாடு சுட்டிக் காட்டுகிறது.

சட்டமாக்க பெரும்பான்மை உள்ளது

10. மேலும் முஸ்லிம்களின் தனி இட ஒதுக்கீட்டைச் சட்டமாக்க காங்கிரஸ் முன் வந்தால் திமுக, இடதுசாரிக் கட்சிகள், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், ராஷ்டிரீய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அதிமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் கூட அதைச் சட்டமாக்க ஆதரவு தரும் வாய்ப்பு உள்ளது. பாஜக, சிவசேனா தவிர அனைத்துக் கட்சிகளும் ஆதரிக்க வாய்ப்பு உள்ளதையும் காங்கிரசுக்கு நாம் சுட்டிக் காட்டுகிறோம்.

தள்ளிப்போட எந்தக் காரணமும் இல்லை

11. முஸ்லிம்களுக்குத் தனி இட ஒதுக்கீடு அளிப்பதைத் தள்ளிப் போட எந்தக் காரணமும் இல்லை என்பதையும், சாக்குப் போக்கு சொல்வதை முஸ்லிம்கள் இனி நம்ப மாட்டார்கள் என்பதையும் முஸ்ம் சமுதாயத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.

இட ஒதுக்கீட்டை அடையும் வரை ஓய மாட்டோம்

12. 60 ஆண்டுகளாகப் புறக்கணிக்கப்பட்டு வரும் முஸ்லிம் சமுதாயம் மற்ற சமுதாய மக்களைப்போல் முன்னேற முஸ்லிம்களுக்குத் தனியாக இட ஒதுக்கீடு வழங்குவதைத் தவிர வேறு வ கிடையாது என்றும், நாடு முழுவதும் பத்து விழுக்காடு தனி இட ஒதுக்கீடு பெறுவதற்காக எத்தகைய தியாகத்தையும் செய்ய முஸ்லிம் சமுதாயம் தயார் என்றும் இம்மாநாடு பிரகடனப்படுத்துகிறது.

முஸ்லிம் வாக்குகளை இட ஒதுக்கீடே தீர்மானிக்கும்

13. அடுத்து வரும் தேர்தல் இந்திய முஸ்ம்கள் வாக்களிக்கும்போது தனி இடஒதுக்கீட்டைத் தவிர வேறு எதையும் கவனத்தில் கொள்ள மாட்டார்கள். வேறு எதன் மூலமும் திருப்தி அடைய மாட்டார்கள் என்ற ஒட்டுமொத்த முஸ்ம்களின் குரலை இம்மாநாடு எதிரொக்கிறது.

அனைத்து மாநிலங்களிலும் இட ஒதுக்கீடு

14. முஸ்லிம்களுக்குத் தனி இட ஒதுக்கீடு அளித்து வரும் கேரளா, தமிழகம், கர்நாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களை முன்மாதிரியாகக் கொண்டு அனைத்து மாநில அரசுகளும் முஸ்லிம்களுக்குத் தனி இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

புதுவை ஆளும் கட்சிக்கு எச்சரிக்கை

15. 2009 தேர்தன்போது இட ஒதுக்கீடு வழங்குவதாக எழுத்து மூலம் வாக்குறுதி அளித்து விட்டு முஸ்லிம்களைத் தொடர்ந்து ஏமாற்றி வரும் புதுவை அரசை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. அடுத்து வரும் தேர்தல் இதற்கான விலையை புதுவை ஆளும் கட்சி கொடுத்தே தீர வேண்டும் என்று இம்மாநாடு புதுவை ஆளும் கட்சியை எச்சரிக்கிறது.

தமிழகத்தில் குளறுபடிகளை சரி செய்க!

16. தமிழக முஸ்ம்களின் நீண்ட நாள் கோரிக்கையான தனி இட ஒதுக்கீடு கோரிக்கையை ஏற்று முஸ்லிம்களில் பிற்பட்டோருக்கு தமிழக அரசு மூன்றரை விழுக்காடு தனி இட ஒதுக்கீடு அளித்தது. முஸ்லிம் சமுதாயம் இதற்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டாலும், சில அதிகாரிகள் பிற்பட்டோர் பட்டியல் இல்லாத முஸ்லிம்களின் உரிமையைப் பறித்து வருகின்றனர். எனவே பொதுப் பிரிவில் தகுதி உள்ள முஸ்லிம்கள் வாய்ப்பு பெற அதிகாரிகள் குறுக்கே நிற்காதவாறு தமிழக முதல்வர் தெளிவான கட்டளை பிறப்பிக்க வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

தமிழகத்தில் அதிகப்படுத்துக…

17. நாடு முழுவதும் பத்து சதவீத இட ஒதுக்கீடு அளிக்குமாறு ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கை கூறியதை கவனத்தில் கொண்டு தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு வழங்கிய இடஒதுக்கீட்டை ஏழு விழுக்காடாக உயர்த்தித் தருமாறு இம்மாநாடு தமிழக முதல்வரைக் கேட்டுக் கொள்கிறது.

திமுக தலைவருக்கு…

18. இந்தியாவின் மூத்த அரசியல்வாதியும், மத்திய அரசில் எதையும் சாதிக்கும் ஆற்றல் மிக்கவருமான தமிழக முதல்வர் மரியாதைக்குரிய கருணாநிதி அவர்கள் தனது முழு சக்தியையும் பயன்படுத்தி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கையைச் சட்டமாக்க மத்திய அரசை வயுறுத்துமாறு இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது..

பறிக்கப்பட்ட உரிமை…

19. வெள்ளையர்கள் இந்த நாட்டை ஆண்டபோது முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கியிருந்தனர். ஆனாலும், வெள்ளையர் களை விரட்டியடிப்பதற்காக ஆங்கிலம் படிக்க மாட்டோம் என்று முஸ்லிம்கள் முடிவு செய்தனர். மேலும், ஆங்கிலேய அரசில் பெற்றிருந்த வேலை வாய்ப்பையும் உதறினர். தேச விடுதலைக்காக முஸ்லிம் முன்னோர்கள் செய்த தியாகத்தால்தான் முஸ்லிம்கள் இன்று பின்தங்கி யுள்ளனர். இதை கவனத்தில் கொண்டு முஸ்லிம்களின் நியாயமான கோரிக்கையை ஆள்வோர் பரிவுடன் பரிசீக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இட ஒதுக்கீடுக்கு ஆதரவளித்தவர்களுக்கு நன்றி!

20. முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு தேவை என்று பல வகையிலும் குரல் கொடுத்து வரும் அனைத்து கட்சி தலைவர்களையும், சமுதாயத் தலைவர்களையும், இயக்கங்களையும், பத்திரிகைகளையும், எழுத்தாளர்களையும், தனி நபர்களையும் மன நிறைவுடன் இம்மாநாடு பாராட்டுகிறது. அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியையும் இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது.

சட்டத்திருத்தம் செய்திடு!

21. அரசியல் சட்டத்தின் பிரிவு 15(டி) மற்றும் 16(4) பின்தங்கிய – அரசின் கல்வி வேலை வாய்ப்புகளில் போதிய பிரதிநிதித்துவம் பெறாத வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கியுள்ளது. இதில் வகுப்பினர் என்ற வார்த்தை சிறுபான்மை’ மக்களைத்தான் குறிக்கும் என்று அரசியல் சாசனம் உருவாக்கும்போது விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால், அதற்கு வேறுவிதமான விளக்கம் அளித்து சிலர் குழப்பம் ஏற்படுத்தி வருகின்றனர். எனவே, “வகுப்பினர்’ என்பதை சிறுபான்மையினர் மற்றும் பின்தங்கிய வகுப்பினர்’ என்று தெளிவாக திருத்தம் செய்யுமாறு இம்மாநாடு மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறது. நன்றி! நன்றி!! இம்மாநாடு சிறப்புற நடந்திட தனது பேரருளை வாரி வழங்கிய எல்லாம் வல்ல இறைவனுக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

எல்லா வேறுபாடுகளையும் மறந்து கடும் சிரமங்களுக்கு மத்தியில் எழுச்சியுடன் கலந்து கொண்ட தாய்மார்களுக்கும், பெரியோர்களுக் கும், பொருளுதவி செய்த மக்களுக்கும், வளைகுடாவில் அற்ப ஊதியத்தில் பணிபுரியும் நிலையிலும் சமுதாயத்தின் உரிமைப் போராட்டத் துக்காக வாரி வழங்கிய சொந்தங்களுக்கும், முஸ்லிம்களின் உணர்வை மதித்து பங்கேற்ற சிறப்பு பார்வையாளர்களுக்கும், அனைத்து ஊடகங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள், செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், கேமராமேன்கள் ஆகியோருக்கும் நன்றிகள். இம்மாநாடு சிறப்புற நடைபெற அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு நல்கிய காவல்துறை, தீயணைப்புத்துறை, உளவுத்துறை, தமிழக அரசின் அனைத்து துறையினருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேடை, ஒளி ஒலி அடிப்படை வசதிகள் செய்து தந்த தொல் நுட்ப வல்லுனர்களூக்கும் நன்றிகள். இம்மாநாடு வெற்றிகரமாக நடைபெற அருள்புரிந்த இறைவனுக்கே புகழனைத்தும்.
தீர்மானம் ஆங்கிலம்..

The resolutions adopted at the Conference on, The Rights of the Oppressed.

The Conference on the Rights of the Oppressed organized by Tamil Nadu Thowheed Jamaath on July, the 4th , 2010 at the Island Grounds, Chennai unanimously adopted the following resolutions.

01. The Muslims who have played a major role in the independence and shaping of India have even after 63 years of independence been deprived of their rightful share in education and employment. Justice Rajendra Sachar Commission and Justice Ranganath Mishra Commission have graphically documented this in their Reports. Justice Ranganath Mishra Commission has also recommended 10% separate reservation for the Muslims. This conference thanks Justice Rajendra Sachar and Justice Ranganth Mishra on behalf of the Muslim community .

02. To mitigate the plight of the Muslims, this conference requests the Central Government to enact a law to provide 10% reservation for Muslims in all educational institutions including institutions of excellence like Indian Institutes of Technology and Indian Institutes of Managements.

03. This conference requests the Central Government to enact a law providing 10% separate reservation for Muslims in employment in the central government and all state governments, public and private sectors and multinational companies.

04. The state police forces, intelligence agencies, Central Reserve Police Force, Border Security Force, and the military during the communal violences in the past have acted with prejudice and against the minorities. This has been established by various enquiry commissions. This conference, therefore requests the Centre to reserve 20% of the posts for the Muslims in the state police forces, intelligence agencies, Central Reserve Police Force, Border Security Force, and the armed forces.

05. The representation of Muslims in both the houses of the parliament and in the state legislatures has been dwindling. This conference requests that 10% of the constituencies be reserved in both the houses of parliament, state legislative assemblies and legislative councils and in all local bodies exclusively for Muslims as has been in the case of scheduled caste and scheduled tribes.

06. The Muslims are being neglected in the distribution of government freebees and social welfare schemes. This conference requests that 10% exclusive reservation for Muslims be made in the government freebees and welfare schemes in accordance with the Mishra Commission recommendation.

07. In implementation of the Mishra Commission recommendation, this conference requests establishment of Muslim Universities in all the States as in Uttar Pradesh.

08. The Indian National Congress promised reservation for Muslims during the 2004 parliamentary election. Muslims voted en-masse. This conference reminds the Congress Party its moral obligation to fulfill its promise to the community.

09 .This conference points out that there are no legal hurdles in providing separate reservation for Muslims. The Ranganth Mishra Commission has dealt in detail this aspect and has concluded separate reservation for Muslims is well within the law.

10. This conference reminds that if the Congress Party were to introduce a bill for reservation for the Muslims, all the allies of the Congress and the parties supporting it and also the Left parties, DMK, AIDMK, Samajwadi party, Bahujan Samajwadi Party, Rashtria Janata Dal, Nationalist Congress Party and most of the national and regional parties except the BJP and Shiv Sena would support it.

11. This conference points out that there is no reason for delaying the provision of separate reservation for Muslims. The Muslims will no longer be carried away by excuses.

12. There is no option other than separate reservation for the betterment of the Muslim community which has been neglected for the past 63 years. This conference proclaims that the Muslims are ready for any sacrifice to achieve 10% separate reservation through out the country.

13. This conference reverberates the voice of the entire Muslim community that it shall not be satisfied with any thing except reservation and that it shall be the only issue with them in the forthcoming elections.

14. This conference resolves that all the state governments provide separate reservations for Muslims following the precedence set by the states of Tamil Nadu, Kerala, Karnataka, Andhra Pradesh and West Bengal.

15. This conference strongly condemns the Puduchery Government for deceiving the Muslims. The ruling Congress Party shall have to definitely pay the price in the ensuing election.

16. The Muslims thankfully acknowledge the provision of 3.5% separate reservation by the Tamil Nadu Government in fulfillment of their long pending demand. This conference draws the attention of the Government of Tamil Nadu to the apathy of certain officials in denying the rights of those Muslims not included in the reservation quota. This conference requests the Hon’ble Chief Minister of Tamil Nadu to pass necessary orders to ensure that eligible Muslims are not barred from competing in the general category.

17. Taking into consideration the Justice Ranganath Mishra Commission Report, this conference requests the Hon’ble Chief Minister of Tamil Nadu to increase to 7% the existing separate reservations for Muslims.

18. This conference requests the Hon’ble Chief Minister of Tamil Nadu, who as an elderly statesman wields an overwhelming influence on the Central Government, to use his good offices in making the Central Government see reason to implement the Justice Ranganath Mishra Commission Report.

19. Muslims had reservation quota during the British rule. In their quest for independence, the Muslims boycotted English and everything that is British. They denounced jobs under the British Colony. It is this sacrifice that has made the Muslims backward. Against this background, this conference implores the ruling elite to compassionately consider the justifiable demands of the Muslim community.

20. This conference thanks and appreciates all those leaders, political parties, organizations, intellectuals, social workers, writers, media, press and individuals who have voiced and supported reservation for Muslims.

21. Articles 15(5) and 16(4) give the State the power to provide reservation for backward class of citizens. Assurances were given during the debates in the Constituent Assembly that minorities were meant by the clause ‘backward class of citizens’. Interpretations contrary to those assurances instill a feeling of insecurity amongst the minorities. This conference requests the central government to amend the Constitution by inserting the word minorities after the clause ‘backward class of citizens’.

This conference praises Allah the Most High and thanks Him for His blessings in conducting this conference.

This conference also thanks all the men, women, children and elders, who have converged here and all those who donated generously and all those noble souls who sweating out in the gulf have bled their every penny for this conference and all those without whose efforts this could not have happened and all the leaders and special guests who graced the conference in a show of solidarity with the Muslims, the press, the media, the editors, reporters, lensmen, technicians, and the contractors, the police department, the intelligence, the fire service, the state government and all its departments. (Ends/)

For more information; Tamil Nadu Thowheed Jamath (TNTJ)

Home                Sri Lanka Think Tank-UK (Main Link)

No comments:

Post a Comment